Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 Sep 2025 5:53 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#59683

ஆபத்தான விளம்பர பதாகை

ஆபத்தான விளம்பர பதாகைமற்றவை

 சோளிபாளையம் அருகே பாரதி நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நிழற்குடை இல்லாமல் பஸ் நிறுத்தம் உள்ளது. இதனால் பஸ் நிறுத்தத்துக்கு வரும் பயணிகள் அங்குள்ள மரத்தடியில் நிற்பார்கள். மக்களுக்கு இடையூறாக மரத்தை மறைத்து விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் விளம்பர பதாகைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2025 5:45 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#59676

மரத்தை வெட்டிய மர்ம நபர்கள்

மரத்தை வெட்டிய மர்ம நபர்கள்மற்றவை

திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள விநாயகபுரம் இரண்டாவது வீதி உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக நன்றாக வளர்ந்து இருந்த 4 மரங்கள் இருந்தது. அந்த மரத்தை சில நாட்களுக்கு முன் யாரோ சிலர் வெட்டி உள்ளார்கள். தற்போது திருப்பூரில் வெயில் வாட்டி வரும் காலகட்டத்தில் மரத்தை வெட்டுவதால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மரத்தை வெட்டி கடத்திய நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 11:18 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#59393

பஸ்கள் நின்று செல்லுமா?

போக்குவரத்து

காங்கயம் பழைய கோட்டை சாலையில் அய்யாசாமி நகர் காலனி பிரிவில் பயணியர் நிழற்குடை அமைந்துள்ளது. தற்போது அய்யாசாமி நகர் காலனி நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காமல் கடந்து செல்கின்றன. இதனால் வெகு நேரம் காத்திருக்கும் பயணிகள் ஏமாற்றமடைந்து, காங்கயம் பஸ் நிலையத்திற்கு நடந்து சென்று பஸ்சில் ஏறி செல்கின்றனர். எனவே அய்யாசாமி நகர் காலனி பிரிவில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 11:17 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#59392

வேகத்தடை அமைக்க வேண்டும்

சாலை

திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கீழ் பல்வேறு பணிகள் நடந்து உள்ளது. அந்த வகையில் திருப்பூர் குமரன் சாலையில் இருந்து டி.எம்.எப். மருத்துவ மனை பாலம் வரை கோர்ட்டு வீதியில், காங்கிரீட் சாலை அமைக்கப்பட்டு்ள்ளது. இந்த சாலையில், வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் மிக வேகமாக செல்கிறது. எனவே கோர்ட்டு சாலையில் இந்தியன் வங்கி அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 11:15 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#59391

காய்ந்த மரம்

காய்ந்த மரம்மற்றவை

காங்கயம்சிவன்மலை அருகே ரவுண்டானா பகுதியில் சாலையோரத்தில் பட்டுப்போன மரம் உள்ளது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அந்த மரம் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த மரத்தை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 11:13 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#59390

ஆக்கிரமிக்கப்பட்ட சாலை

சாலை

தாராபுரம்-பல்லடம் சாலையில், குண்டடத்தில் இருந்து ½ கிலோ மீட்டர் மேற்கே, நால்ரோடு (எரகாம்பட்டி பிரிவு) உள்ளது. இதற்கு மேற்கே பொடாரம்பாளையம், சேடபாளையம், கத்தாங்கண்ணி, செங்காளிபாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த ஊர்களுக்கு செல்லும் தார்சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. இதனால் ஒரு வாகனம் சென்றால் மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முடியாது. எனவே சாலை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 11:12 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#59389

சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்போக்குவரத்து

பல்லடம் கடைவீதியில், தினசரி மார்க்கெட், உழவர் சந்தை, வணிக வளாகங்கள் உள்ளன. பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், சரக்கு வாகனங்களை இயக்க காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை போலீசார் தடை விதித்துள்ளனர். ஆனால், சில சரக்கு வாகனங்கள், தடையை மீறி கடைவீதிக்குள் வந்து சரக்குகளை இறக்குகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே தடை விதிக்கப்பட்ட நேரங்களில் இயங்கும் சரக்கு வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 10:15 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#59194

நாய்கள் தொல்லை அதிகரிப்பு

மற்றவை

திருப்பூர்-தாராபுரம் சாலையில் இருந்து கே.செட்டிப்பாளையம் வழியாக வீரபாண்டிக்கு செல்லும் சாலையில் 50-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் வட்டமிட்டு சாலையில் நிற்பதால் வாகன ஓட்டிகள் அந்த சாலையில் செல்ல முடியாத நிலை உள்ளது. இதேபோல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் விடாமல் விரட்டி விரட்டி கடிக்கிறது. இதனால் அவர்கள் ஆஸ்பத்திரிக்கு செல்லும் நிலை காணப்படுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை விரட்டுகிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீேழ விழும்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 10:15 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#59193

குண்டும், குழியுமான சாலை

சாலை

திருப்பூர் தென்ன்ம்பாளையம் தெற்கு உழவர் சந்தை முன்பு உள்ள மெயின் ரோட்டில், வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகிறது. தற்போது இந்த சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் தட்டுத்தடுமாறி செல்கிறது. மேலும வாகன விபத்துகளும் அவ்வப்போது நடந்து வருகிறது. அதனால் குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?செல்வராஜ், திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 10:14 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#59192

விபத்து அபாயம்

போக்குவரத்து

திருப்பூர் காமராஜபுரம் பகுதியில் 1- வார்டு பகுதியில் ரேஷன் கடையின் எதிரே கண்காணிப்பு கேமராவின் கம்பம் உள்ளது. இந்த கம்பம் சாய்ந்து உடைந்து விழும் நிலையில் காணப்படுகிறது. சாலையோரத்தில் ஆபத்தாக காணப்படுதால் விபத்து அபாயம் ஏற்படும் சூழல் நிலவுகிறது. மேலும் அந்த கம்பத்தின் அருகே மின்கம்பங்களும் உள்ளன. எனவே பேராபத்துகள் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த கம்பத்தை சீரமைக்க முன்வருவார்களா?காமேஷ், திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 10:13 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#59191

குவியும் குப்பைகள்

குப்பை

திருப்பூர் குமார்நகர் அரசுப்பள்ளி வீதியில் சாலைேயாரத்தில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். மேலும் மலைபோல் குவிந்து காணப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை காணப்படுகிறது. இதேபோல் அங்குள்ள மரத்தை வெட்டி சேதப்படுத்தி உள்ளனர். எனவே தொற்று நோய் பரவும் முன், குப்பைகளை அகற்றுவதோடு, மரத்தை முறையாக பராமரிக்க வேண்டும்.ராஜீவ், திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 10:13 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#59190

இருக்கைகள் அமைக்கப்படுமா?

மற்றவை

வெள்ளகோவில் நகராட்சி 19-வது வார்டு பகுதியில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையில் இருக்கைகள் அமைக்கப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக இ்ந்த நிலை காணப்படுகிறது. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக முதியவர்கள் நீண்ட நேரமாக நிற்பதால் சிரமப்படுகிறார்கள். எனவே பயணிகள் அமரும் வகையில் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.லோகேஸ்வரன், வெள்ளகோவில்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick