Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 July 2025 7:20 PM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#58082

குண்டும், குழியுமான சாலை

சாலை

திருப்பூர் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் முதல் -ராயர்பாளையம் வரை செல்லும் சாலை ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டு,குழியுமான சாலையாக உள்ளது. இந்த சாலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராஜேந்திரன், அருள்புரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 7:19 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#58080

நாய்கள் தொல்லை

மற்றவை

திருப்பூர் பழவஞ்சிபாளையம் முதல் கே.செட்டிப்பாளையம் வரை சாலையோரங்களில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்துகிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். மேலும் குப்பைக்கழிவுகளை இழுத்து வந்து சாலையில் நாய்கள் போட்டு செல்கிறது. இதேபோல் பெண்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் விரட்டுகிறது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே சாலையோரங்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். ராமன்,...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 7:18 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#58079

குடிநீர் வருமா?

தண்ணீர்

திருப்பூர் வாலிபாளையம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வாரத்துக்கு ஒரு முறை குடிநீர் வந்தது. ஆனால் தற்போது 15 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் வரவில்லை. இதனால் அப்பகுதியல் வசிக்கும் மக்கள் அன்றாட தேவைகளுக்கு தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகள் வாலிபாளையம் பகுதிக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?கர்ணன், வாலிபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 7:14 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#58074

சுகாதார சீர்கேடு

குப்பை

சுகாதார சீர்கேடுதிருப்பூர் கே.செட்டிப்பாளையம் மெடிக்கல் பஸ் நிறுத்தம் அருகே குப்பைகள் மலைபோல் குவிந்து காணப்படுகிறது. இந்த குப்பை குவியலால் சுற்றுச்சூழல் மாசு அடைவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மேலும் அந்த குப்பையில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்களால்அந்தப்பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? செல்வம், திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 11:31 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#57788

புதர்மண்டிக்கிடக்கும் சாலை

சாலை

அலங்கியம் ஊராட்சிக்கு உட்பட்ட தார்சாலை அலங்கியத்தில் இருந்து மேற்கு வட்டமலைபுதூர், கடத்தூர், கணியூர் செல்லும் சாலையின் இருபுறமும் 1½ கிலோ மீட்டர் தூரம் புதர்கள் மண்டிக்கிடக்கிறது. இதனால் வாகனங்கள் விலகி செல்ல முடியவில்லை. எனவே சாலையின் இருபுறமும் உள்ள புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 11:30 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#57787

ஒளிராத விளக்குகள்

மின்சாரம்

உடுமலை ருத்திரப்ப நகர் பகுதி 3-வது வீதியில் கடந்த ஒரு மாதமாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் நாய்கள் தொல்லை, திருடர்கள் தொல்லை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே மின்விளக்குகளை பழுது நீக்கி ஒளிர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 11:27 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#57786

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

பல்லடத்தில் இருந்து கோவைக்கு தினமும் 2 ஆயிரம் பேர் பஸ்களில் செல்கின்றனர். இதனால் பல்லடம் வழியாக கோவை செல்லும் அனைத்து பஸ்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். எனவே காலை நேரங்களில் பல்லடத்தில் இருந்து கோவைக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 11:26 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#57785

புதர்மண்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்

புதர்மண்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்மற்றவை

உடுமலை அடுத்த தின்னப்பட்டி ஊராட்சியில் சுகாதார வளாகம் உள்ளது. அந்த வளாகம் போதிய பராமரிப்பு மற்றும் பயன்பாடு இல்லாமல் புதூர் சூழ்ந்து காட்சி பொருளாக மாறி விட்டது. இதை சாதகமாகக் கொண்டு சமூக விரோதிகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே சுகாதார வளாகத்தை சீர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 11:23 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#57784

சாலையில் வழிந்தோடும் கழிவு நீர்

சாலையில் வழிந்தோடும் கழிவு நீர்கழிவுநீர்

திருப்பூர்-ராயபுரம் மேற்கு வீதி செல்லும் வழியில் சாக்கடை கழிவு நீர் நிரம்பி சாலையில் செல்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, கொசு தொல்லையும் அதிகரித்து விட்டது. எனவே கழிவு நீர் சாலையில் போகாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 9:58 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#57575

சாலை அமைக்கும் பணி தாமதம்

சாலை

பல்லடம் அருகே உள்ள சேடபாளையம்- நாரணாபுரம் பிரிவு வெட்டுப்பட்டான் குட்டைக்கு செல்லும் ரோடு புதுப்பிப்பதற்காக பணிகள் தொடங்கியது. இதற்காக ரோடு தோண்டப்பட்ட நிலையில் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாலை தோண்டப்பட்டதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். மேலும், விபத்துகளும் நடைபெற்று வருகின்றது. எனவே சாலையை உடனடியாக புதுப்பித்து போக்குவரத்திற்கு பயன்படும் வகையில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். காலசாமி, பல்லடம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 9:57 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#57574

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

திருப்பூர் பெத்திசெட்டிபுரம் முதல் வீதியின் நொய்யலாற்றைக் கடக்கும் இடத்தில் பிரதான குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குடிநீர் குழாயில் உடைப்பு தண்ணீர் வீணாகி வருகிறது. கடந்த ஒரு மாத்திற்கும் மேலாக தண்ணீர் விணாகுவதால் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சீராக குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதனால் உடைந்த குடிநீர் குழாைய சீரமைத்து பொதுமக்களுக்கு தங்கதடையின்றி குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? ரத்தினசாமி, திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 9:56 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#57573

சுகாதாரமாக குடிநீர் வழங்கப்படுமா?

தண்ணீர்

௮லங்கியம் ஊராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. ௮மராவதி ஆற்றிலிருந்து நேரடியாக உறிஞ்சப்பட்டு மக்களுக்கு சேறு மற்றும் மண்ணுடன் குடிநீர் ௭ன்ற முறையில் வினியோகம் செய்யப்படுகிறது. மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் ௮பாயம் உள்ளது. இதனால மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? சாகுல் அமித், ௮லஙகியம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick