Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 Jun 2026 10:42 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#64891

குவிந்து கிடக்கும் குப்பைகள்

குப்பை

பொங்குபாளையம் ஊராட்சி பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக பரமசிவம்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுகிறது. அதேபோல் மாரப்பம்பாளையம் பிரிவிலும் குப்பைகள் அதிக அளவில் உள்ளது. இவை நீண்ட நாட்களாக அள்ளப்படாததால், சுகாதார சீர்கேடு மற்றும் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், கொசு மற்றும் ஈக்கள் தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குப்பையை முறையாக அகற்ற வேண்டும். குமார், பொங்குபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2026 10:41 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#64890

கிடப்பில் கிடக்கும் சாலைப்பணி

சாலை

திருப்பூர் மண்ணரை ஏ.எஸ்.பண்டிட் நகர் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தையொட்டிய பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இந்த சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அங்கு புதியதாக சாலை அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கின. தொடர்ந்து ரோட்டில் கருங்கல் ஜல்லிகள் கொட்டப்பட்ட ரோட்டில் பரப்பப்பட்டன. ஆனால் அதன்பின் சாலை அமைப்பதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் இந்த ரோட்டில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றன. 2 சக்கர வாகனங்களில் செல்பவர்களும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2026 10:41 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#64889

நொய்யல் ஆற்றில் வீசப்படும் குப்பைகள்

குப்பை

திருப்பூரில் நொய்யல் ஆறு பாழ்படுவதை தவிர்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆற்றில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க ஆற்றின் கரையை சுற்றிலும் இரும்பு கம்பிகளை கொண்டு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், ஆற்றில் குப்பை கொட்டுவது முழுமையாக தடுக்கப்படவில்லை. சில இடங்களில் கடைகள் மற்றும் வீடுகளில் வெளியாகும் குப்பைகளை இரும்பு வேலிகளை துண்டித்து ஆற்றில் கொட்டி வருகின்றனர். மேலும் சில இடங்களில் வேலிக்கு மேலே ஆற்றுக்குள் குப்பைகளை வீசியும் வருகின்றனர். குறிப்பாக மாநகரப்பகுதியில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2026 4:51 PM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#64810

பகலில் எரியும் தெரு விளக்குகள்

மின்சாரம்

பல்லடம் நகரில் பஸ் நிலையம் உள்பட பெரும்பாலான இடங்களில் தெரு விளக்குகள் பகலிலும் எரிந்த வண்ணம் உள்ளது. அவை தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேல் எரிவதால் அரசின் நிதி வீணாக்கப்படுகிறது. மேலும் பகல் நேரத்தில், தெரு விளக்குகள் தொடர்ந்து எரிவதால், பல்புகள் அடிக்கடி பழுதாகிறது. இதனால், இரவு நேரத்தில் எரிய வேண்டிய தெருவிளக்குகள் எரியாமல், இருள் சூழ்ந்த நிலை நீடிக்கிறது. இதனை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் மற்றும் திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே பகல் நேரத்தில் எரியும் தெரு விளக்குகளை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2026 4:49 PM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#64809

குவிந்து கிடக்கும் குப்பை

குப்பை

பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் விநாயகர் கோவில் வீதி உள்ளது. அங்கு போக்குவரத்து அதிகம் இருப்பதால் அந்த பகுதி எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில் அந்த சாலையோரம் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. ேமலும் குப்பைகளில் இரை தேடவரும் நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு வாகனங்கள் மீது மோதி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். அப்பகுதியில் ஈக்கள் அதிக அளவில் இருப்பதால் பல்வேறு தொற்று நோய் பரவி சுகாதாரகேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனால் அங்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2026 4:49 PM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#64808

குண்டும், குழியுமான நெடுஞ்சாலை

சாலை

கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காங்கயம் பழைய பஸ் நிலையத்தை அடுத்த பெட்ரோல் பங்க் அருகில் தார்ச்சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், வேகமாக வரும் வாகனங்கள் இந்த குழியில் இறங்கி சேதமடைந்து வருகின்றன. குறிப்பாக, இரவு நேரங்களில் குழி இருப்பது தெரியாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனா். மேலும், குழியை பார்த்து தங்களுடைய வாகனங்களை திடீரென்று நிறுத்துவதால் பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே, பெரிய விபத்து ஏற்படும் முன் சாலையை சீரமைக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2026 4:48 PM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#64807

ஆபத்தான மின்கம்பம்

மின்சாரம்

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட என்.என்.பேட்டை வீதியில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் உள்ள மின் கம்பம் ஒன்று சிமெண்டுகள் பெயர்ந்து அடிப்பகுதியில் கீறல் விழுந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இது எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துடனேயே உள்ளனர். மேலும், தனியார் நிறுவன கேபிள் வயர்கள் மின்கம்பத்தை சுற்றி வைக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக மின்கம்பம் உறுதித்தன்மையை இழந்து வருகிறது. எனவே, சேதமடைந்துள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2026 4:47 PM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#64805

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

கழிவுநீர்

திருப்பூர் அருகே உள்ள டி.கே.டி. மில்லில் இருந்து கணபதிபாளையம் வழியாக பொங்கலூர் செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட முல்லை நகரில் இருந்து சாக்கடை கால்வாய் வழியாக வரும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. அங்கு கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தியாகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உள்ளது. மேலும் சாலையில் கழிவுநீர் செல்வதால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது கழிவுநீர் படுவதால் வாகன ஓட்டிகளுக்கிடையே வாக்குவாதம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2026 9:56 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#64370

குவிந்து கிடக்கும் குப்பைகள்

குப்பை

கணக்கம்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையம் அருகில் குப்பை முறையாக அல்லாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் சுற்றுச்சுசூழல் மாசு ஏற்படுவதோடு சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும் பயங்கரமான துர்நாற்றம் வீசுவதால், அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், மூக்கை பிடித்தப்படி செல்லும் நிலை உள்ளது. இதேபோல், கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதோடு குப்பையை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குமார், கணக்கம்பாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2026 9:49 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#64369

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்து

பல்லடம் என்.ஜி.ஆர். ரோடு கடைவீதி போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். இங்கு வரும் சரக்கு வாகனங்களை சிலர் தாறுமாறாக நிறுத்தி விட்டுச் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் நிறுத்த போக்குவரத்து போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் மஞ்சள் கோடுகளை வரைந்துள்ளனர். ஆனால் சிலர் விதிகளை பின்பற்றாமல் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, கடைவீதியில் வாகனங்களை முறையாக நிறுத்தவும், சரக்கு வாகனங்கள் அவைகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், சரக்குகளை கொண்டு வரவும்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2026 9:48 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#64368

மூடப்படாத குழியால் விபத்து

சாலை

திருப்பூர் அருகே கணபதிபாளையத்தில் இருந்து அல்லாளபுரம் வழியாக அத்திக்கடவு குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாய் அங்குள்ள பி.ஏ.பி. வாய்க்கால் அருகே மரத்தின் வேர்களால் அடைப்பு ஏற்பட்டது. இதையொட்டி, குழாயை சீரமைக்க குழி தோண்டப்பட்டது. அதன்பின்னர் அந்த குழி மூடப்படவில்லை. இதனால் தினமும் விபத்துகள் நடக்கிறது. மேலும் பி.ஏ.பி. வாய்க்கால் அருகே குறுகிய சாலையாக இருப்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகின்றன. எனவே குடிநீர் குழாயை சீரமைக்க தோண்டப்பட்ட குழியை உடனடியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2026 9:47 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#64367

வாய்க்கால் தூர்வாரப்படுமா?

மற்றவை

திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் இருந்து பிரிந்து பி.ஏ.பி. கிளை வாய்க்கால் முத்தணம்பாளையம் வழியாக செல்கிறது. இந்த கால்வாய் கடந்த சில மாதங்களாக தூர்வாரப்படாமல் குப்பைகள் குவிந்துள்ளது. மேலும், அந்த பகுதியில் கால்வாயை மறிந்து மண் கொட்டி பொதுமக்கள் சென்றுவர ஏதுவாக வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடும்போது முறையாக செல்ல முடிவதில்லை. எனவே வாய்க்காலை முறையாக தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலசுப்பிரமணியன், திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick