Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 Aug 2025 10:29 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#58642

ஆபத்தான மின்கம்பம்

மின்சாரம்

திருப்பூர் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட முட்டியங்கிணறு பஸ் நிறுத்தம் அருகே மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் பழுதாகி ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழலாம். இதனால் வாகன விபத்துகள் நடக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஆபத்தான மின்கம்பத்தால் பயணிகள் பஸ் நிறுத்தம் அருகே நிற்க அச்சப்படுகிறார்கள். எனவே மின்வாரிய அதிகாரிகள் ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?குமார்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 10:28 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#58641

கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வருமா?

கழிவுநீர்

திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தின் முகப்பு பகுதியில் இரண்டு கழிப்பிடங்கள் உள்ளன. இதில் ஒரு கழிப்பிடத்தில் மின்விளக்குகள் எரியாமல் இருக்கின்றன. இதனால் இரவு நேரங்களில் பயணிகள் கழிப்பிடத்தை பயன்படுத்தும் போது பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். அவர்களின் உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இதேபோல் இங்கு பெண்களுக்கான கழிவறை இழுத்து பூட்டப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அவர்கள் கழிப்பிடத்தை தேடி அலையும் நிலை உள்ளது. எனவே பூட்டப்பட்டு கிடக்கும் கழிப்பிடத்தை திறந்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:49 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#58627

கரடு முரடான சாலையால் தடுமாறும் வாகன ஓட்டிகள்

கரடு முரடான சாலையால் தடுமாறும் வாகன ஓட்டிகள்சாலை

திருப்பூர் காசிபாளையத்தில் இருந்து நல்லூர் செல்லும் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை அமைக்கப்பட்டது. இதனால் சாலையில் சில மீட்டர் தூரத்திற்கு பள்ளம் தோட்டப்பட்டது. தற்போது அந்த பகுதியில் சாலை மோசமாக உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பனியன் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் பனியன் நிறுவனங்களுக்கு வரும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே போக்குவரத்து நிறைந்த அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:45 PM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#58623

பஸ் நிறுத்தத்தில் இருக்கை வசதி இல்லாததால் பயணிகள் அவதி

பஸ் நிறுத்தத்தில் இருக்கை வசதி இல்லாததால் பயணிகள் அவதிமற்றவை

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் எதிரே பஸ் நிறுத்தத்தம் அமைந்துள்ளது. இங்கு கலெக்டர் அலுவலகம் வரும் ஏராளமான பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். இந்த பஸ் நிறுத்தத் தில் ஏராளமானோர் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுத்து வாகனங்கள் நிறுத்தாத வகையில் தடுப்புகள் அமைக்க வேண்டும். மேலும், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு இருக்கை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 15
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:43 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#58617

சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள்

சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள்சாலை

திருப்பூர் பி.என்.ரோடு போக்குவரத்து நிறைந்த சாலை. இந்த சாலையில் அமைந்துள்ள தனியார் நிறுவனங்கள், தங்களின் நிறுவனங்களில் பணியாற்றுவோரின் வாகனங்களை சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்துகிறார்கள். இதனால் 40 அடி அகல சாலை குறுகலாகி அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதற்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:40 PM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#58614

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்சாலை

மூலனூரில் உள்ள முக்கிய சாலைகளில் ஆடுகள் கூட்டமாக சுற்றித் திரிவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில், ஆடுகள் சாலையின் குறுக்கே நிற்பதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகிறார்கள். ஆடுகளை வைத்திருப்போர், அவை சாலைகளில் திரியும் நிலையை கட்டுப்படுத்த எந்த முயற்சியையும் எடுக்காமல் இருப்பதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆடுகள் தவறுதலாக வாகனங்களில் அடிபட்டு காயமடைந்தால், அதன் உரிமையாளர்கள் வாகன ஓட்டிகளிடம் பெரும்தொகையை இழப்பீடாகக் கோருவது...

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:36 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#58612

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்தண்ணீர்

திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் கண்ணபிரான் காலனியில் கடந்த சில நாட் களாக குழாய் உடைந்துகுடிநீர் வீணாக கழிவுநீர் கால்வாயில் கலந்து வருகிறது. குழாய் உடைந்த இடத்தில் குடிநீர் தேங்கி நிற்பதால் அருகில் உள்ள கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து குழாய் உடைப்பு பெரிதாகி அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்பாக குழாய் உடைப்பை சீரமைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும். -

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 4:43 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#58379

அங்கன்வாடி மையத்தில் மதுஅருந்தும் மர்மநபர்கள்

அங்கன்வாடி மையத்தில் மதுஅருந்தும் மர்மநபர்கள்மற்றவை

ஊத்துக்குளி அருகே மொரட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட காவிரிநகர் பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையம் முன்பு, சில மர்மநபர்கள் மது அருந்துதல், கஞ்சா விற்பனை செய்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன்காரணமாக அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகள் பயத்தில் உள்ளனர். எனவே அங்கன்வாடி மையம் முன் அமர்ந்து மது அருந்தும் நபர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 9:49 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#58287

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

தண்ணீர்

திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. பல கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து அதிகமான செலவு செய்து குடிக்க மாநகராட்சி நிர்வாகம் தண்ணீர் கொண்டு வருகிறது. அந்த தண்ணீர் சில இடங்களில் வீணாகிறது. குறிப்பாக மண்ணரை பழைய மின்சார வாரிய அலுவலகம் பகுதியில் தொடர்ந்து தண்ணீர் வீணாகிறது. எனவே அந்த குழாயை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 9:47 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#58286

பழுதடைந்த மின்கம்பம்

பழுதடைந்த மின்கம்பம்மின்சாரம்

காங்கயத்தில் இருந்து பெருந்துறை செல்லும் சாலையில் நால்ரோடு அருகில் பாலிக்காடு உள்ளது.இங்குள்ள கிரஷர் பகுதியில் உள்ள சாலையோரம் உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்த காணப்படுகிறது. இந்த கம்பத்தை உடனே மாற்றாவிட்டால், பலத்த காற்று வீசும்போது, முறிந்து விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே உடனே அந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் ெதரிவித்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 9:46 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#58285

குவிந்து கிடக்கும் குப்பை

குவிந்து கிடக்கும் குப்பைகுப்பை

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குப்பைகளை கொட்ட இடம் கிைடக்காததால், மாநகராட்சி நிர்வாகம் திணறுகிறது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 9:44 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#58284

நாய்கள் தொல்லை அதிகரிப்பு

மற்றவை

நாய்களால் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தொலைக்காட்சியில் நாய்கள் குழந்தைகளை கடித்து குதறும் வீடிேயாக்கள் குலைநடுங்க வைக்கிறது. திருப்பூரில் நாய்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அவை ஆங்காங்கே குப்பை தொட்டிகள் ஓரம் நின்று கொண்டு இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துகின்றன. நாய்கள் தொல்லையால் தினமும் விபத்து ஏற்படுகிறது. எனவே திருப்பூரில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்பறப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick