Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 April 2025 11:36 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#55427

சாலையோரம் பிளாஸ்டிக் குப்பைகள்

குப்பை

காங்கயம் பழைய கோட்டை சாலையில் சென்னிமலை சாலையிக்கு செல்ல இணைப்பு சாலையில் அடர்ந்த முட்புதர்களாக காணப்படுகிறது. இங்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஒரு டிராக்டர் அளவுள்ள பிளாஸ்டிக் கவர்களை ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் சாலையோரம் கொட்டி உள்ளனர். இதனால் அப்பகுதி பிளாஸ்டிக் கவர்களால் ஆன மேடாக காட்சியளிக்கிறது. பொதுமக்கள் அன்றாடம் கொட்டும் குப்பைகளை பொது இடங்களில் கொட்டக் கூடாது என நகராட்சி நிர்வாகம் தெரிவித்து வரும் நிலையில் சில மர்ம நபர்கள் பொது இடங்களில் பிளாஸ்டிக் கவர்களை கொட்டியதற்கு நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 10:00 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#55407

பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?

மற்றவை

குன்னத்தூர் செட்டிகுட்டி ஊராட்சி குன்னத்தூர்- கோபி ரோடு செட்டிகுட்டை பிரிவு பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணியர் நிழற்குடை சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் உள்ளே சென்று அமர்வதை தவிர்த்து வருகின்றனர். உள்ளிருக்கும் நாற்காலிகள் பழுதாகி விட்டது. மேலும் அசுத்தமாக காணப்படுகிறது. எனவே நிழற்குடையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். குமார், குன்னத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 9:59 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#55406

குவியும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பை

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் வாங்க வருகின்றனர். மார்க்கெட்டில் இருந்து சூரியன் நகர் செல்லும் சாலையில் உள்ள ஓடையின் ஓரமாக குப்பைகள் மற்றும் காய்கறி கழிவுகள் கொட்டுவதால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுத்து, அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 April 2025 10:22 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#55246

மரக்கிளைகளுக்கு இடையில் மின்வயர்கள்

மின்சாரம்

திருப்பூர் நெசவாளர் காலனியில் மரக்கிளைகளுக்கு இடையில் மின்வயர்கள் செல்கிறது. இதனால் காற்று வீசும்போது மின்தடை ஏற்படுகிறது. இப்படி வயர்களில் மரக்கிளை உரசுவதால் மின்விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 April 2025 10:21 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#55245

பூட்டிக்கிடக்கும் ஏ.டி.எம்.மையம்

பூட்டிக்கிடக்கும் ஏ.டி.எம்.மையம்மற்றவை

தாராபுரம்-உடுமலை சாலையில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம்.மையம் பூட்டிக்கிடக்கிறது. இதானல் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். நாட்டின் அடித்தளமே பொதுத்துறை வங்கிகள்தான். அந்த வங்கிகளே ஆட்டம் கண்டால்பொதுமக்களின் நிலை என்னவாகும். எனவே ஏ.டி.எம்.சேைவ முடங்கும் முன்பு அதை வங்கி அதிகாரிகள் கவனித்து தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கூறுகிறார்கள்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 April 2025 10:19 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#55244

சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீர்

சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீர்கழிவுநீர்

காங்கயம் பங்களாபுதூர் சாலையில் உள்ள சாக்கடையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. சாக்கடையை முறையாக தூர்வாராததால், சாக்கடையில் கழிவுநீர் நிறைந்து ஒட்டியுள்ள சாலையில் ஓடுகிறது. இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 April 2025 10:16 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#55241

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்போக்குவரத்து

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கனரக வாகனங்கள் பீக் அவர்ஸ்-ல் நுழைவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அதற்கென வகுக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் ஆம்புலன்சு கூட செல்ல முடியவில்லை. எனவே இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 4:05 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#55150

நாய்கள் தொல்லை அதிகரிப்பு

மற்றவை

திருப்பூரில் நாளுக்குநாள் நாய்கள் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளன. தனியாக செல்வோரை நாய்கள் துரத்தி கடிப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது. பெண்கள், குழந்தைகள் தனியாக செல்ல முடிவதில்லை. குப்பை ெதாட்டி அருகில் கூட்டமாக நிற்கும் நாய்கள் இரு சக்கர வாகனத்தில் செல்வோரை துரத்துவதால் அவர்களும் வாகனங்களுடன் விழுந்து விடுகிறார்கள். எனவே மாநகராட்சி நிர்வாகம் சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 10:07 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#55045

மூடப்படாத தண்ணீர் வால்வு தொட்டியால் வாகன ஓட்டிகள்

மூடப்படாத தண்ணீர் வால்வு தொட்டியால் வாகன ஓட்டிகள்மற்றவை

திருப்பூர் மாநகராட்சி 21-வது வார்டு தொட்டி மண்ணரை ரேஷன் கடை அருகில் தண்ணீர் திறந்து விடும் வால்வு தொட்டி உள்ளது. இந்த தொட்டி மூடப்படதாதால் இரவு நேரத்தில் வருகின்ற வாகனங்களும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. குழந்தைகள் விளையாடும் போதும் தடுமாறி விழும் நிலை உள்ளது. தொட்டிக்கு சரியாக மூடி போட்டு மூடிவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 10:05 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#55044

தொற்றுநோய் பரவும் அபாயம்

தொற்றுநோய் பரவும் அபாயம்கழிவுநீர்

திருப்பூரில் இருந்து பி.என்.பாளையம் செல்லும் சாலையில் பவானி நகர் கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அடைத்துள்ளதால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கியுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி கழிவுநீர் கால்வாயை தூர்வாரி பின்னர் குப்பைகளை அள்ளிச்செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 10:03 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#55042

அமணலிங்கேசுவரர் கோவில் முன்பு பஸ்களை நிறுத்த வேண்டும்

அமணலிங்கேசுவரர் கோவில் முன்பு பஸ்களை நிறுத்த வேண்டும்போக்குவரத்து

உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து திருமூர்த்திமலைக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. அவை அமணலிங்கேசுவரர் கோவில் பகுதியில் நிற்காமல் அணைக்கு அருகே உள்ள படகு இல்லத்தில் நிறுத்தப்படுகிறது. மேலும் ஒரு சில பஸ்கள் திருமூர்த்திமலை கோவில் வரையிலும் இயங்குவதில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே அரசு பஸ்கள் திருமூர்த்திமலை கோவில் பகுதியில் நிறுத்தப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 March 2025 5:31 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#54994

தூர்வாரப்படுமா நொய்யல்?

தண்ணீர்

தூர்வாரப்படுமா நொய்யல்?திருப்பூர் நொய்யல் ஆற்றை கடந்த வடகிழக்கு பருவ மழைக்கு முன்பு தூர்வாரியது. பருவமழை முடிந்து 3 மாதங்களை கடந்தும் தூர்வாராததால் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனால் நொய்யல் ஆற்றின் அருகில் உள்ள பகுதிகளில் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நொய்யல் ஆற்றை தூர்வார வேண்டும். -அருண், திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick