Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 March 2025
Mr.Mohan | சேலம்-மேற்கு
#54834

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

சேலத்தில் இருந்து இளம்பிள்ளை செல்லும் வழியில் சிவதாபுரத்தில் பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பகுதியில் கடந்த 6 மாத காலமாக குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் கோடை கால தொடங்கிய நிலையில் தட்டுபாடின்றி அனைவருக்கும் குடிநீர் வழங்கிட அதிகாாிகள் சேதமடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சரி செய்ய வேண்டும். -விஜயகுமார், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025
Mr.Mohan | கங்கவள்ளி
#54833

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

தம்மம்பட்டி-கெங்கவல்லி செல்லும் சாலையில் 8-வது வார்டு பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதி குறுகிய அளவில் இருப்பதால் 2 பஸ்கள் எதிரெதிரே வந்தால் இரு சக்கர வாகனங்கள் ஒதுங்குவதற்கு கூட இடமில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் தனியார் வாகனங்களை சிலர் சாலையில் அதிக நேரத்திற்கு நிறுத்துகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்ககை...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025
Mr.Mohan | நாமக்கல்
#54830

அதிகாலையில் குடிநீர் வினியோகம்

தண்ணீர்

வெண்ணந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. குறிப்பாக அதிகாலை நேரத்தில் தண்ணீர் வினியோகிக்கப்படாமல் காலை 9 மணிக்கு விடப்படுகிறது. இதனால் கூலித்தொழிலாளிகள், அன்றாட பணிகளுக்கு செல்பவர்களுக்கு பெரும் பாதிப்பாக உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் அதிகாலை வேளையில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கணேசன், வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025
Mr.Mohan | சேந்தமங்கலம்
#54829

கடையாக மாறிய போலீஸ் உதவி மையம்

மற்றவை

கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள காரவள்ளியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த மையம் தற்போது செயல்படாமல் உள்ளது. இதனால் அந்த மையத்தை சாலையோர வியாபாரிகள் தங்களின் கடையாக மாற்றி உள்ளனர். எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கு மீண்டும் போலீஸ் உதவி மையம் செயல்பட வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாகும். -சுந்தரேஸ்வரன், காரவள்ளி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025
Mr.Mohan | நாமக்கல்
#54828

சாலை ஆக்கிரமிப்பு

சாலை

வெண்ணந்தூர் போலீஸ் குடியிருப்பில் இருந்து நடுப்பட்டி செல்லும் சாலையின் முகப்பில் இருபுறமும் விளம்பர பலகைகள் வைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் நடுப்பட்டியில் இருந்து வெண்ணந்தூர் செல்பவர்களுக்கு சாலையில் கனரக வாகனங்கள் வரும்போது ஒதுங்க இடமில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். -ரமேஷ், வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025
Mr.Mohan | அரூர்
#54826

வேகத்தடைகள் வேண்டும்

சாலை

அரூர் பஸ் நிலையத்தில் சமீப காலமாக விபத்துகள் அதிகமாக நடக்கின்றன. இதற்கு காரணம் பஸ் நிலையத்திற்குள் வரும் பஸ்கள் வேகமாக வருவதாகும். மேலும் இந்த ஆண்டில் இதுவரை 5-க்கும் மேற்பட்ட விபத்துகள் இந்த பகுதியில் நடந்துள்ளன. எனவே விபத்துகளை தடுக்க பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியில் வேகத்தடைகள் அமைத்து வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். -சாமிநாதன், அரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025
Mr.Mohan | பாலக்கோடு
#54825

தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படுமா?

தண்ணீர்

பாலக்கோடு தாலுகா பேளாரஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட காவாப்பட்டி கிராமத்தில் குடிநீர் தொட்டி உள்ளது. ஆனால் இது கடந்த சில மாதங்களாக நீண்ட நாட்களாக மோட்டார், மின்சாதனபெட்டி பழுதடைந்து செயல்பாடு இன்றி புதர் மண்டி உள்ளது. மேலும் தற்போது கோடைகாலம் என்பதால் தண்ணீருக்காக பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அதிகாரிகள் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து அப்பகுதி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். -ஈஸ்வரன், காவாப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025
Mr.Mohan | பர்கூர்
#54824

காட்சி பொருளான சிக்னல்

சாலை

பர்கூர் அருகே அங்கிநாயனப்பள்ளியில் கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. அங்கிநாயனப்பள்ளியில் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவர்கள் சாலையை கடந்து செல்ல ஏதுவாக அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே சிக்னல் அமைக்கப்பட்டிருந்து. தற்போது இந்த சிக்னல் செயல்படாமல் காட்சி பொருளாக மட்டுமே உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதியில் விபத்துகள் அதிகளவில் நடைபெறுகிறது. எனவே பொதுமக்களின்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025
Mr.Mohan | பர்கூர்
#54823

சேதமடைந்த அங்கன்வாடி மையம்

மற்றவை

பர்கூர் தாலுகா பாலேப்பள்ளி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றன. இந்த கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுகிறது. இதனால் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப பெற்றோர் மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் அங்கன்வாடி மையத்தில் முறையான கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை. இதன் காரணமாக குழந்தைகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோரின்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#54822

முன்பதிவு மையம் அமைக்கலாமே!

போக்குவரத்து

கிருஷ்ணகிரி நகரில் வெளி மாவட்டங்களை சேர்ந்த பலரும் பணி நிமித்தமாக தங்கி உள்ளனர். அவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு அரசு விரைவு பஸ்களிலும், தனியார் ஆம்னி பஸ்களிலும் செல்ல வேண்டி உள்ளது. ரெயில் வசதி இல்லாத காரணத்தால் பயணிகள் பஸ் பயணத்தை சார்ந்தே இருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் இருந்து அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு வசதி இல்லாத காரணத்தால் பயணிகள் சிரமப்படுகிறார்கள். பெங்களூருவில் இருந்து புறப்படும் அரசு விரைவு பஸ்கள் ஓசூரில் பயணிகளை ஏற்றி கிருஷ்ணகிரி வருகின்றன. பயணிகள்...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 March 2025
Mr.Mohan | சேலம்-வடக்கு
#54634

பாதாள சாக்கடைக்கு மூடி அமைக்கப்படுமா?

கழிவுநீர்

சேலம் அஸ்தம்பட்டி பிட்சார்ட்ஸ் ரோட்டின் ஆரம்ப பகுதியில் பாதாள சாக்கடை மூடி இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது. தற்போது பேரிகார்டு வைத்து வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தும் வகையில் இது இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் பேரிகார்டில் மோதி விபத்துக்குள்ளாக வாய்ப்புள்ளது. மேலும் பாதசாரிகளும் பாதாள சாக்கடையில் தவறி விழ வாய்ப்புள்ளது. எனவே திறந்த நிலையில் உள்ள பாதாள சாக்கடைக்கு விரைந்து மூடி அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. -குமார், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 March 2025
Mr.Mohan | ஆத்தூர்
#54631

சுகாதார சீர்கேடு

குப்பை

ஆத்தூரில் இருந்து பைத்தூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் சாலை ஓரங்களில் குப்பைகள், கோழி கழிவுகள் மூட்டை, மூட்டைகளாக கொட்டப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், மாணவ-மாணவிகளும் மிகவும் சிரமம் அடைகின்றனர். சாலையோரம் கொட்டப்படும் கோழி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கோழி கழிவுகளை கொட்டும் இறைச்சி கடைக்காரர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. -கணேசன், ஆத்தூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick