Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 May 2025 4:53 PM GMT
Mr.Mohan | சேலம்-தெற்கு
#56394

அறிவிப்பு பலகை அமைக்கலாமே!

சாலை

பனமரத்துப்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து சேலம் செல்லும் பிரதான சாலையில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகே அறிவிப்பு பலகை, ஒளிரும் எச்சரிக்கை விளக்குகள் பொருத்தப்படாமல் உள்ளது. இது அதிக அளவில் வளைவுகள் உள்ள சாலை என்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் இவை பொருத்தப்பட்டால் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். எனவே அறிவிப்பு பலகை, ஒளிரும் எச்சரிக்கை விளக்குகள் அமைக்க அதிகாரிகள் முன் வர வேண்டும். -கிருஷ்ணன், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 4:49 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#56391

நோய் பரவும் அபாயம்

மற்றவை

நாமகிரிப்பேட்டை நகர பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்தது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வகையான தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே சுகாதாரத்துறையினர் தண்ணீர் தேங்கி நிற்கும் குடியிருப்பு பகுதியை பார்வையிட்டு கொசு ஒழிப்பு மருந்து அடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -தர்மன், நாமகிரிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 4:48 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#56390

போக்குவரத்து இடையூறு

சாலை

நாமக்கல்-முதலைப்பட்டி பைபாஸ் மேம்பாலம் அருகில் சர்வீஸ் சாலை ஒன்று உள்ளது. இந்த சாலையில் லேசான மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருவதுடன், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சர்வீஸ் சாலையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பார்களா? -சங்கர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 4:47 PM GMT
Mr.Mohan | குமாரபாளையம்
#56389

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

பள்ளிபாளையம் சுபாஷ் நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். தெருக்களில் நடந்து செல்லும் குழந்தைகளையும், பெண்களையும் தெருநாய்கள் விரட்டி சென்று கடிக்கின்றன. எனவே இந்த பகுதியில் உள்ள தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுப்பிரமணியன், பள்ளிபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 4:46 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#56388

புதிய தார்சாலை அமைக்கப்படுமா?

சாலை

வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மின்னக்கல்லில் இருந்து வாய்க்கால் பட்டறை செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி புதிய தார்சாலை அமைத்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. -மணிகண்டன், மின்னக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 4:45 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#56385

சாலையில் திடீர் விரிசல்

சாலை

சேந்தமங்கலம்-காந்திபுரத்தில் இருந்து கொல்லிமலை அடிவாரம் காரவள்ளிக்கு செல்வதற்கு குறுக்கு சாலை காணப்படுகிறது. அந்த சாலை செல்லும் வழியில் வெண்டாங்கி அருகில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையில் தற்போது திடீர் ‘பிளவு' ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிய விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி அந்த பிளவு பெரிதாவதற்குள் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தாஸ், வெண்டாங்கி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 4:31 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#56382

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

அரூர் பெரியார் நகரில் சண்முகம் ஆசிரியர் தெரு உள்ளது. இந்த தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால் தற்போது வரை இந்த பணி பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த வாரம் பெய்த கனமழையால் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சாக்கடை கால்வாயில் மழை நிரம்பி உள்ளது. மேலும் மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்வதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கிடப்பில் கிடக்கும்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 4:31 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#56381

மயானத்திற்கு சாலை வசதி

சாலை

தர்மபுரி செட்டிகரை கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு இக்கிராமத்தின் அருகே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் மயானம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் இறந்தால் அந்த மயானத்திற்கு எடுத்து செல்ல சாலை வசதி இல்லை. இதனால் ஏரி கரையின் ஓரத்திலும், சேறும், சகதியுமான ஒத்தையடி பாதையிலும் இறந்தவர்களின் உடலை எடுத்து சென்று மயானத்தில் பொதுமக்கள் அடக்கம் செய்து வருகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து மயானத்திற்கு செல்ல சாலை வசதி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 4:30 PM GMT
Mr.Mohan | அரூர்
#56380

சேதமடைந்த சிலையை சீரமைப்பார்களா?

மற்றவை

அரூர் அருகே நாச்சினாம்பட்டி கிராமத்தில் அண்ணா சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை தற்போது பராமரிப்பின்றி உள்ளது. இந்த சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கம்பி வலையால் செய்யப்பட்ட கூண்டு துருப்பிடித்து சேதம் அடைந்தது. மேலும் சிலையின் கீழ் பகுதியில் உள்ள பீடமும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே இந்த சிலையை சீரமைக்க சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராம், நாச்சினாம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 4:29 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#56379

வாகன ஓட்டிகள் அவதி

சாலை

பர்கூர் பேரூராட்சி 11-வது வார்டு கே.எஸ்.ஜி. தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு செல்லும் சிமெண்டு சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது அந்த சிமெண்டு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் செல்லவே வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். மேலும் நடந்து செல்லவோ இயலாத நிலையில் உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் தாமதம் இன்றி தரமான சிமெண்டு சாலை அமைத்து தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 4:28 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#56378

புதிய சாலை அமைக்கலாமே!

சாலை

கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்றது. இதற்காக அந்த சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் விடப்பட்டன. இந்த நிலையில் அந்த சாலையில் பணிகள் நிறைவு பெற்று போக்குவரத்து தொடங்கி உள்ளது. ஆனாலும் சாலையில் பல இடங்களில் மேடு, பள்ளமாகவும், கற்களும் கிடக்கின்றன. மேலும் கட்டுமான பணிக்காக பயன்படுத்திய மரக்கட்டை உள்ளிட்ட பொருட்களும் ஆங்காங்கே இருக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்தி அங்கு புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? -பழனி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 4:27 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#56377

சாலையோரம் தேங்கும் கழிவுநீர்

கழிவுநீர்

பர்கூர் ஜெகதேவி சாலையில் கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால் கால்வாய்களை வணிக வளாகத்தினர் அடைத்துள்ள காரணத்தினால் சாலையோரங்களில் மழை நீரும், கழிவு நீரும் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்களின் செல்வோர் வேகமாக செல்லும் போதும் நடந்து செல்பவர்கள் மீதும் கழிவுநீர் படுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தாமதம் இன்றி ஓம் சக்தி கோவில் வரை கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -வேலுசாமி, பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick