Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Jun 2025 5:10 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#56770

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட ராயக்கோட்டை சாலையில் அரசு பள்ளி, தனியார் வங்கிகள் உள்ளன. அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் திறந்த வெளிநிலையில் உள்ளது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக இருப்பதால் திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாயை தூர்வாரி மூட வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.- கோவிந்தன், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 5:08 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#56768

கொசுக்கள் தொல்லை

கழிவுநீர்

தர்மபுரியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் டெகிஸ்பேட்டை இப்ராஹிம் குடோன் வீதி உள்ளது. இந்த பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பல மாதமாக அதே பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அந்தந பகுதியில் கொசுக்கள் தொல்லையும் அதிகமாகி விட்டது. எனவே இங்கு தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. -முகமது, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 5:07 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#56767

பாழடைந்து காணப்படும் பயணிகள் நிழற்கூடம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் கொசப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாளையம் போடம்பட்டியில் நிழற்கூடம் உள்ளது. இந்த நிழற்கூடம் பாழடைந்து காணப்படுகிறது. மேலும் அங்கு மதுப்பிரியர்கள் குடித்துவிட்டு மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகளை அங்கு விட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் பயணிகள் நிழற்கூடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதன்காரணமாக வெயில் மற்றும் மழைக்காலங்களில் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சேதமடைந்த நிழற்கூடத்தை அகற்றிவிட்டு புதிய நிழற்கூடம் அமைக்க மாவட்ட நிர்வாகம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jun 2025 8:01 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#56638

கிணறு தூர்வாரப்படுமா?

தண்ணீர்

சேலம் தாதம்பட்டி பகுதிக்கு உள்பட்ட நாகர்படையாச்சி காட்டில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியின் நடுவே ஒரு பொதுக்கிணறு உள்ளது. இங்குள்ளவர்களின் குடிநீர் ஆதாரமாக இந்த கிணறு உள்ளது. இந்த கிணற்றில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதன் காரணமாக கிணற்றை யாரும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது. மேலும் சுற்றுச்சுவர் இல்லாததால் கிணறு, மண் சரிந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எனவே அதிகாரிகள் கிணற்றில் உள்ள குப்பைகளை தூர்வாரி சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 31
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jun 2025 8:00 PM GMT
Mr.Mohan | ஆத்தூர்
#56637

வேகத்தடை வேண்டும்

சாலை

நங்கவள்ளி பஸ் நிறுத்தம் அருகில் குஞ்சாண்டியூர் செல்லும் வழியில் சோமேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே குப்பனூர் பிரிவு சாலையில் ஏற்கனவே வேகத்தடை அமைக்கப்பட்டு பாதுகாப்பாக இருந்தது. கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு இந்த வேகத்தடை நீக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த வளைவு சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே நீக்கப்பட்ட வேகத்தடையை மீண்டும் அமைத்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ராஜன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jun 2025 7:57 PM GMT
Mr.Mohan | மேட்டூர்
#56636

புதிய மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

மற்றவை

மேட்டூர் நகராட்சி பஸ் நிலையம் அருகே நான்கு ரோடு உள்ளது. இந்த பகுதியில் உள்ள உயர் கோபுர மின்விளக்குகள் பழுதடைந்து உள்ளது. இதனால் அந்த பகுதியில் இரவில் போதுமான வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவில் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே பழுதான மின்விளக்குகளை அகற்றிவிட்டு புதிய மின்விளக்குகள் பொருத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சசிகுமார், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jun 2025 7:56 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#56635

காட்சி பொருளான மின்விளக்கு

மின்சாரம்

இரும்பாலை அருகே உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் இருந்து அழகுசமுத்திரம் வரை செல்லும் சாலை இரவு நேரங்களில் மின்விளக்குகள் இருந்தும் வெளிச்சம் இல்லாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே இந்த பகுதியில் காட்சி பொருளாக காணப்படும் மின்விளக்குகளை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். -குமார், இரும்பாலை.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jun 2025 7:55 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#56634

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

மேச்சேரியில் இருந்து மேட்டூர் செல்லும் வழியில் குஞ்சாண்டியூர் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த இடத்தில் சாலை குறுகிய சாலையாகவும், பிரிவு சாலையாகவும் காணப்படுகிறது. இந்த பிரிவு சாலையின் வழியாக நங்கவள்ளி ஊருக்குள் பஸ்கள் சென்று வருகின்றன. இந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் அதிகமான கனரக வாகனங்கள் சென்று வருவது குறிப்பிடத்தக்கது. எனவே குஞ்சாண்டியூர் பஸ் நிறுத்த பகுதியில் போக்குவரத்து போலீசார் தினசரி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்து...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jun 2025 7:54 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#56633

சேதமடைந்த சாலை

சாலை

நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தொப்பம்பட்டி கிராமம். இங்கிருந்து பச்சுடையாம்பாளையம் செல்லும் தார் சாலை சேதமடைந்து கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 2, 4 சக்கர வாகனங்களில் செல்வோர் அந்த சாலையில் தடுமாறி கீழே விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே இந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணதாசன், ஒடுவன்குறிச்சி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jun 2025 7:52 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#56632

சேதமடைந்த சாலை

சாலை

நாமக்கல் - திருச்சி சாலையில் பொன்விழா நகர் குடியிருப்பு உள்ளது. இந்த பகுதிக்கு செல்ல திருச்சி பிரதான சாலையில் இருந்து வரவேற்பு வளைவு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் உள்ள சாலையில் ஜல்லி பெயர்ந்து சேதமடைந்து காணப்படுகிறது. இப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் உள்ளது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைவார்கள். சேதமடைந்துள்ள இந்த சாலையில் அவசர தேவைக்காக பயன்படுத்த முடிவதில்லை. எனவே பழுதான இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்பதே இந்த...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jun 2025 7:50 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#56631

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படுமா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் காவலர் குடியிருப்பில் இருந்து நடுப்பட்டி செல்லும் சாலை, ராசிபுரத்திலிருந்து ஆட்டையாம்பட்டி செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் இருபுறங்களும் சாலையோர கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக அங்கு விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் கவனத்தில் கொண்டு ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி விபத்து இல்லா பயணத்தை கொண்டு வர வேண்டும். மேலும் அந்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். -சுப்பிரமணியம்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jun 2025 7:49 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#56630

திறந்து கிடக்கும் மின்சார பெட்டி

மின்சாரம்

பொட்டணம் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரில் மின் கம்பம் உள்ளது. இந்த கம்பத்தில் திறந்த நிலையிலும், கையால் தொடும் வகையிலும் மின்பெட்டி காணப்படுகிறது. தற்போது பள்ளி திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் அந்த வழியாக செல்லும்போது அதனை தொடுவதற்கு வாய்ப்பாக உள்ளது. எனவே மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி ஆபத்தான நிலையில் உள்ள அந்த மின்சார பெட்டியை மூடி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் -குலசேகரன், பொட்டணம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick