Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 May 2025 4:24 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#56209

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் மேற்கு ஒன்றியத்தில் உள்ளது ஜே.காருப்பள்ளி. இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாய் சரிவர தூர்வாரப்படவில்லை. இதனால் கால்வாயில் பிளாஸ்டிக் குப்பைகள், குடிநீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்கள் நிரம்பி உள்ளன. இந்த சுகாதார சீர்கேட்டால் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாய் தூர்வாரப்பட வேண்டும். -ராம், கெலமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 4:20 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#56207

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் போலுப்பள்ளியில் அரசு மருத்துவக்கல்லூரி முன்பு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக வார விடுமுறை நாட்களில் வாகன நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் கடக்க நீண்ட நேரம் ஆகிறது. எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்படும் கால கட்டங்களில் அந்த பகுதியில் போக்குவரத்து பிரிவு போலீசாரை நியமித்து போக்குவரத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தீபக்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 4:19 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#56206

பராமரிப்பு இல்லாத சிறுவர் பூங்கா

மற்றவை

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் குழந்தைகள் பூங்கா உள்ளது. இங்கு சிறுவர்-சிறுமிகள் விளையாடுவதற்கு ஊஞ்சல், சீசா உள்ளிட்ட உபகரணங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. மேலும் அதில் உள்ள தகடுகள் துருப்பிடித்து இருப்பதால் குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்படுகின்றன. மேலும் இந்த பூங்கா முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த பூங்காவை சீரமைத்து தர வேண்டும் என்பதே இந்த பகுதிமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. -கிருஷ்ணன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 4:11 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#56022

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் மாநகராட்சி 4 ரோடு சந்திப்பு பகுதியில் இருந்து ராமகிருஷ்ணா ரோடு செல்லும் சாலையில் மீன், இறைச்சிக்கடைகள் உள்ள பகுதிகளில் நாய்கள் அதிகளவில் உள்ளன. நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆட்கள் நடமாட்டம் குறைந்த நிலையில் வெளியூர்களுக்கு சென்று வரும் பயணிகள் நாய்களால் விரட்டப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த பகுதியில் உள்ள மசூதிக்கு அதிகாலையில் தொழுகை நடத்த செல்ல வேண்டும் என்றால் கற்களை எடுத்துக்கொண்டு ஒரு வித பீதியுடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே நாய்கள் நடமாட்டத்தை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 4:09 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#56021

காட்சி பொருளான மின்விளக்கு

மற்றவை

இரும்பாலை அருகே உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் இருந்து அழகுசமுத்திரம் வரை செல்லும் சாலை இரவு நேரங்களில் மின்விளக்குகள் இருந்தும் வெளிச்சம் இல்லாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே இந்த பகுதியில் காட்சி பொருளாக காணப்படும் மின்விளக்குகளை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். -சரத்சந்தர், மோகன்நகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 4:08 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#56020

தாமதமாகும் மேம்பால பணிகள்

சாலை

சேலம் மாமாங்கம்-கருப்பூர் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக போக்குவரத்து அதிகம் உள்ள நேரங்களில் இந்த இடத்தை கடப்பதற்கு 15 நிமிடம் ஆகிறது. எனவே தாமதமாகும் இந்த மேம்பால பணியை விரைவாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோவிந்த், கருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 4:08 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#56019

ஒளிரும் பட்டைகள் பொருத்தலாமே!

சாலை

ஓமலூர்-தாரமங்கலம் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தை இருசக்கர வாகன ஓட்டிகள் முதல் கனரக வாகன ஓட்டிகள் வரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மேம்பாலத்தில் உள்ள சாலையில், சாலையை இரண்டு பாகங்களாக பிரிக்கும் வெள்ளை வர்ணம் பூசப்படாமலும், ஒளிரும் பட்டைகள் பொருத்தப்படாமலும் உள்ளது. இதனால் விபத்துகள் நடக்கும் அபாயமும் உள்ளது. இதனை அதிகாரிகள் கவனித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஹரி, ஓமலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 3:35 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#56007

குடிநீர் வீணாகிறது

தண்ணீர்

வெண்ணந்தூர்-ராசிபுரம் நெடுஞ்சாலையில் வெண்ணந்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே உள்ள சாலை வளைவில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு மாதக்கணக்கில் தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதனால் அந்த இடத்தில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்லும்போது சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே உடைந்த குழாயை விரைவில் சரிசெய்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -செல்வம், வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 3:34 PM GMT
Mr.Mohan | திருச்செங்கோடு
#56006

குடியிருப்பு வாசிகள் அவதி

மற்றவை

திருச்செங்கோடு தாலுகா பெரியமணலி கிராமத்தில் ஜேடர்பாளையம் அருந்ததியர் தெரு உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் லேசான அளவில் மழை பெய்தாலும் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. மேலும் மற்ற பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் இங்கு குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே இப்பகுதி பொதுமக்கள் பாதிப்படையாத வகையில் கழிவுநீரை அப்பறப்படுத்தவும், மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் வழி வகை செய்ய வேண்டும். -ரமேஷ்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 3:33 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#56005

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கொல்லிமலை அரியூர் நாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் இந்த பகுதியில் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். கடந்த வாரத்தில் மட்டுமே 10-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை தெருநாய்கள் கடித்துள்ளது. எனவே கூட்டமாக சுற்றும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -மாதேஷ், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 3:33 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#56004

பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

ராசிபுரத்தில் இருந்து சேலம் பழைய பஸ் நிலையத்திற்கும், இளம்பிள்ளைக்கும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் சில பஸ்கள் மட்டும் ஆண்டகலூர்கேட் வழியாக வந்தால் இப்பகுதிகளில் உள்ள மக்களின் பயன்பாட்டிற்கு மிகவும் ஏதுவாக இருக்கும். தற்போது மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு ராசிபுரம் வழியாகவே செல்லவேண்டிய நிலை உள்ளது. எனவே ஆண்டகலூர்கேட் வழியாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -நித்திஷ், ராசிபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 3:32 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#56003

பயனற்ற நிழற்கூடம்

மற்றவை

கொல்லிமலை அரியூர் நாடு ஊராட்சி மேல்கலிங்கம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற் கூடம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த நிழற் கூடம் தற்போது ஆங்காங்கே சிமெண்டு பூச்சுகள் உடைந்து பயனற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அங்கு செல்ல பயணிகள் அச்சப்படுகின்றனர். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் நிழற்கூடத்தை புதுப்பிக்க வேண்டும் என்று அப்பகுதி மலைவாழ் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். -சீனிவாசன், சோளக்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick