Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
10 Aug 2025 6:15 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#58428

சாலை நடுவே பள்ளம்

சாலை

தாரமங்கலம் அருகே உள்ள அமரகுந்தி பஸ் நிலையத்தில் இருந்து அதிராம்பட்டி செல்லும் பிரதான சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த பாலம் உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணித்து வருகின்றனர். எனவே சாலையின் நடுவே ஆபத்தான உள்ள பள்ளத்தை உடனடியாக சீரமைத்து அசம்பாவிதத்தை தவிர்க்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -மணி, தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 6:14 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#58427

மின்விளக்குகள் எரிவதில்லை

மின்சாரம்

சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுப்புற பகுதிகளில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் பழுது ஏற்பட்டுள்ளதால் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் அச்சத்துடனே நடந்து செல்கின்றனர். எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுது ஏற்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்குகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சசி, தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 6:13 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#58426

குப்பைத்தொட்டி வைக்கலாமே!

குப்பை

சேலம் அம்மாபேட்டை பிரிவு ரோட்டில் இருந்து மிலிட்டரி ரோடு செல்லும் வழியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் குப்பைத்தொட்டி இல்லாததால் பலர் சாலையிலேயே குப்பைகளை கொட்டி செல்கின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் குப்பைத்தொட்டி அமைத்து, சாலையில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ஜெகன், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 5:52 PM GMT
Mr.Mohan | குமாரபாளையம்
#58422

சாலையோரம் குப்பைகள்

குப்பை

பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள தியேட்டருக்கு எதிரில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. மழை பெய்தால் இந்த குப்பைகளால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் ஒரு சிலர் அந்த குப்பைகளை தீ வைத்து விடுகின்றனர். இது பஸ் போக்குவரத்து உள்ள சாலை என்பதால் தீ எரியும்போது ஏற்படும் புகையால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே உள்ளாட்சி நிர்வாகம் இதில் தலையிட்டு அந்த இடத்தில் குப்பைகள் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஹரிகரன், பள்ளிபாளையம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 5:51 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#58421

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் ஆனங்கூர் ஊராட்சி ஒன்றியம் நெட்டவேலம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியை ஒட்டி கழிவுநீர் குட்டை உள்ளது. துர்நாற்றம் வீசியும் அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. குழந்தைகள் படிக்கும் தொடக்கப்பள்ளி என்பதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக கழிவுநீர்குட்டையை மூடி கழிவுநீர் வாய்க்கால் அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் வேண்டும். -குமார், நெட்டவேலம்பாளையம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 5:50 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#58420

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

நாமகிரிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு அம்பேத்கர் நகர் மதுரை வீரன் கோவில் வீதியில் பல ஆண்டுகளாக சாக்கடை வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. தெரு மற்றும் வீடுகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. புகார் அளித்தும் பலனில்லை. பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுப்பார்களா? -செல்வா, நாமகிரிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 5:49 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#58419

இருசக்கர வாகனங்களால் இடையூறு

போக்குவரத்து

கொல்லிமலை செம்மேட்டில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அதன் நுழைவு வாயில் பகுதியில் ஏராளமான இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அவசர சிகிச்சைக்காக வரும் ஆம்புலன்ஸ் எளிதாக செல்ல முடியாமல் சில நேரங்களில் சிரமத்துடன் செல்கின்றன. எனவே அங்கு வாகனங்கள் இடையூறாக நிற்காமல் ஓரமாக நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். -நாராயணன், செம்மேடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 5:49 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#58418

பொதுமக்கள் அச்சம்

மற்றவை

சேந்தமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் எதிரே அம்மா பூங்கா இயங்கி வருகிறது. அந்த பூங்கா வளாகத்தில் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து குப்பை கூலங்கள் கொட்டப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து தற்போது இறைச்சிக்கடை போட்டுள்ளனர். இதனால் இறைச்சி கழிவுகளை தின்பதற்கு அப்பகுதியில் உள்ள தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் பூங்காவிற்கு பொதுமக்கள் அச்சத்துடனே வருகின்றனர். எனவே அங்கு இறைச்சி கடை போடுவதை தவிர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சத்யராஜ்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 5:43 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#58415

பாதாள சாக்கடை பணி

கழிவுநீர்

கிருஷ்ணகிரி நகரில் 5 ரோடு முதல் காந்தி சாலை வரையில் சாக்கடை கால்வாய் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் பல இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு உள்ளன. இவ்வாறு நீண்ட நாட்களாக சாலை தோண்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். குறிப்பாக அந்த சாலையில் எந்த ஒரு கடைகளுக்கும் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே பாதாள சாக்கடை பணிகளை துரிதப்படுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சக்தி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 5:42 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#58414

சேறும், சகதியுமான சாலை

சாலை

ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள கே.சி.சி. நகரிலிருந்து சின்ன ஏலகிரி செல்லும் சாலையின் அருகே வைகை நகர் என்ற பகுதி உள்ளது. தற்போது இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் மெயின் ரோட்டில் இருந்து வைகை நகர் உள்ளே செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. மழைக்காலங்களில் சேறும், சகதியும் நிறைந்து, மக்கள் நடந்து செல்லவே முடியாத அவல நிலை உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை தார் சாலையாக அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 5:40 PM GMT
Mr.Mohan | ஊத்தங்கரை
#58413

பஸ்சுக்காக காத்திருப்பு

போக்குவரத்து

ஊத்தங்கரை தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட அண்ணா பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்திற்கு புறநகர் பஸ்கள் எதுவும் வருவதில்லை. இதனால் பயணிகள் பல மணி நேரம் பஸ்சுக்காக காத்திருந்து ஏமாற்றம் அடைகின்றனர். எனவே அனைத்து புறநகர் பஸ்களையும் அண்ணா பஸ் நிலையம் வந்து செல்ல சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பார்த்திபன், ஊத்தங்கரை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 5:34 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#58411

குண்டும், குழியுமான சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே பெரியானூர் பிரிவு சாலையில் இருந்து நம்மாண்டள்ளி வரை சுமார் 3 கிலோமீட்டர் வரை தார் சாலை செல்கிறது. இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் நோயாளிகள் தினமும் சென்று வர பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த சாலையை புதுப்பிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ஆனந்த், பஞ்சப்பள்ளி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick