Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
3 Aug 2025 5:02 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#58204

சாலை வசதி

சாலை

பென்னாகரம் தாலுகா பள்ளிப்பட்டி பிரிவு பையூரான் கொட்டாய் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்கள் சாலையில் செல்லும் போது கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையை ஆய்வு செய்து புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ரவிக்குமார், பள்ளிப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:01 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#58203

மரங்களுக்கு தீ வைக்கலாமா!

மற்றவை

மொரப்பூரிலிருந்து ஆவலம்பட்டி, அப்பியம்பட்டி, சிந்தலப்பாடி உள்பட பல்வேறு கிராமங்களுக்கு செல்ல போடிநாயக்கன்பட்டி அருகே உள்ள ரெயில்வே பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த பாலத்தின் அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக மூங்கில் மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த மூங்கில் மரங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டனர். இதனால் மூங்கில் மரத்தின் அடிப்பகுதிகள் தீயில் எரிந்து கருகி உள்ளன. மரங்களை வளர்க்க வலியுறுத்தும் அரசு இதுபோன்ற மரங்களுக்கு தீ வைத்து எரிப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 4:59 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#58201

பராமரிக்கப்படாத சுகாதார வளாகம்

மற்றவை

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் பெங்களூரு பஸ்கள் நிற்கும் இடத்திலும், பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் நுழையும் இடத்திலும் ஆண் பயணிகளுக்காக இயற்கை உபாதை கழிப்பதற்காக சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இவை முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. குறிப்பாக ஓசூர், பெங்களூரு செல்ல இருக்கும் பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் நேரத்தில் மிகுந்த சிரமத்துடன் நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே அந்த சுகாதார வளாகங்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 4:58 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#58200

பஸ்கள் வருவதில்லை

போக்குவரத்து

சூளகிரியில் பஸ் நிலையம் கட்டப்பட்ட பிறகு கடந்த 5 ஆண்டுகளாக எந்த ஒரு பஸ்சும் ஊருக்குள் வந்து, பயணிகளை ஏற்றிச் செல்வதில்லை. இதனால் சூளகிரி நகரப்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள், கிருஷ்ணகிரிக்கோ, ஓசூருக்கோ செல்வதற்கு சுமார் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், முதியவர்கள், நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சூளகிரி நகர பகுதிக்குள் ஓசூர், கிருஷ்ணகிரி செல்லும் அனைத்து பஸ்களும் வந்து செல்லும் வகையில் சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 4:57 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#58199

எரியாத மின்விளக்கு

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து உத்தனப்பள்ளி செல்லும் பிரதான சாலை உள்ளது. அதிக அளவில் வாகனங்கள் கடந்து செல்வதால் இந்த இடத்தில் இரவு நேரங்களில் விபத்தை தடுக்கும் பொருட்டு உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்த மின்விளக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக எரியவில்லை. இதனால் சூளகிரியில் இருந்து உத்தனப்பள்ளி பிரியும் சாலை முழுவதும் இருட்டாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சூளகிரி மேம்பாலத்தையொட்டி உத்தனப்பள்ளி பிரிவு சாலையில் உள்ள மின்விளக்கை சரி செய்திட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 4:55 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#58197

வேகத்தடை அவசியம்

சாலை

ஓசூர் அந்திவாடியிலிருந்து தளி நோக்கி செல்லும் சாலை இணையும் இடம் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளது. அந்திவாடி விளையாட்டு மைதானத்தில் இருந்து டி.வி.எஸ். நகர் நோக்கி வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் அந்திவாடியிலிருந்து சாலையை கடக்கும் பொதுமக்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே விபத்துகளை தவிர்க்க அந்த பகுதியில் தடுப்பு அல்லது வேகத்தடை அவசியம் அமைக்க வேண்டும். -முத்துநாகசெல்வன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 6:52 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#58073

பாதுகாப்பு வேலி அவசியம்

மற்றவை

தாரமங்கலத்தில் ஆடி பண்டிகையையொட்டி கண்ணனூர் மாரியம்மன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து வந்து செல்வார்கள். இந்தநிலையில் பஸ் நிலையத்தின் கைலாசநாதர் கோவில் பூங்காவின் வளைவில் ஒரு பெரிய சாக்கடை கால்வாய்க்கு தடுப்புகள் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. இந்த இடத்தில் போதுமான மின்விளக்குகளும் இல்லை. எனவே பாதுகாப்பு வேலி அவசியம் அமைக்க தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சசிகுமார், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 6:52 PM GMT
Mr.Mohan | எடப்பாடி
#58072

சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்கள்

மற்றவை

தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையில் கூட்டம் கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. சாலையில் செல்லும்போது தெருநாய்கள் வாகனத்தின் குறுக்கே திடீரென்று ஓடுவதால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். மேலும் இவைகள் கால்நடைகளை கடித்து விடுகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை அதிகாரிகள் முன்வர வேண்டும். –-பொதுமக்கள், தேவூர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 6:30 PM GMT
Mr.Mohan | எடப்பாடி
#58071

தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

மற்றவை

தேவூர் அருகே கோணக்கழுத்தானூரில் இருந்து எல்லப்பாளையம் செல்லும் சாலையில் குறுக்கே கால்வாய் பாலம் உள்ளது. இந்த கால்வாய் பாலத்தின் வழியாக எல்லப்பாளையம், கல்லம்பாளையம், குறுக்குபாறையூர் உள்பட பல்வேறு கிராமப்புற விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், கூலித் தொழிலாளர்கள் தினமும் தேவூர் நகர பகுதிக்கு சென்று வருகின்றனர். இந்த பாலத்திற்கு தடுப்புச்சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கால்வாயில் விழும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து கால்வாய் பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 6:29 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#58070

சாலையில் வீணாகும் தண்ணீர்

தண்ணீர்

சேலம் 4 ரோடு பெரமனூரில் தமிழ்நாடு நகர்ப்புற வீட்டு வசதி வாரியம் உள்ளது. இந்த பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக சாலையோரம் குடிநீர் குழாய் மூலம் வாரம் ஒரு முறை தண்ணீர் வினிேயாகிக்கப்படுகிறது. தண்ணீர் வரும் நேரங்களில் சாலையில் உள்ள இணைப்பு பகுதியில் இருந்து குடிநீர் வெளியேறி வீணாக செல்கிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைப்பது இல்லை. வாரம் ஒரு முறை வழங்கப்படும் குடிநீர் இப்படி பொதுமக்களுக்கு கிடைக்காமல் சாலையில் வீணாக செல்கிறதே? என அவர்கள் வருத்தமடைகின்றனர். சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 6:29 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#58069

ஆபத்தான மின்கம்பம் அகற்றப்படுமா?

மின்சாரம்

சேலம் சங்கர் நகரில் மின்கம்பம் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்த மின்கம்பம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீேழ விழும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் இந்த மின்கம்பத்தை பொதுமக்கள் கயிற்றால் கீழே விழாதபடி கட்டி வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி ஆபத்தான வகையில் உள்ள இந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலாஜி, சங்கர் நகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 6:27 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#58068

சாலையில் தேங்கும் தண்ணீர்

தண்ணீர்

வெண்ணந்தூர் அடுத்த அத்தனூர், ஆலம்பட்டி பகுதியில் இருந்து மேட்டு மிஷின் செல்ல தார்சாலை உள்ளது. இந்த தார்சாலையில் இரு புறங்களிலும் போதிய சாக்கடை வசதி இல்லாததால் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் சாலை ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -செல்வி, ஆலம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick