Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Jan 2023 4:48 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#24782

மூடி கிடக்கும் சமுதாயக்கூடம்

மூடி கிடக்கும் சமுதாயக்கூடம்மற்றவை

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராம எல்லையில் ரூ.85 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய சமுதாயக்கூடம் 2 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படவில்லை, மூடியே கிடக்கிறது. அந்தக் கட்டிடத்தில் இரவில் மதுபிரியர்கள் மதுபானம் குடிக்கின்றனர். கழிவறை கதவுகள், கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சேதம் அடைந்துள்ளன. சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சமுதாயக்கூடத்தை திறக்க வேண்டும்.-கணேசன், தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 5:52 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#24591

பழுதான பயணிகள் நிழற்குடை

பழுதான பயணிகள் நிழற்குடைமற்றவை

ஜோலார்பேட்டை அருகே டி.வீரப்பள்ளி பகுதியில் திரியாலம் கூட்ரோட்டில் திருப்பத்தூர் பகுதியில் இருந்து நாட்டறம்பள்ளியை நோக்கி செல்லும் மார்க்கத்தில் அமைந்துள்ள பஸ் பயணிகள் நிழற்குடை மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. அதில் பயணிகள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். அதை சரி செய்யக்கோரி பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 5:57 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#24586

மாட்டுத்தொழுவமாக மாறிய பயணிகள் நிழற்குடை

மாட்டுத்தொழுவமாக மாறிய பயணிகள் நிழற்குடைமற்றவை

நாட்டறம்பள்ளி ஒன்றியம் புல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளத்தூர் பகுதியில் பயணிகள் நிழற்குடை மாட்டுத் தொழுவமாக மாறி விட்டது. அதில் மாடுகள் கட்டப்பட்டு வருவதால் தற்போது பெய்து வரும் மழைக்கு பயணிகள் நிற்கக்கூட இடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடையை பொதுமக்கள் பயன்படுத்த ஆவண செய்வார்களா? -மணிவண்ணன், திம்மாம்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 5:42 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#24581

கழிவுநீரை வடிய வைப்பார்களா?

கழிவுநீர்

ஜோலார்பேட்டையை அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு செல்லும் தெருவில் உள்ள வீட்டின் முன்பு கழிவுநீர் நீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை தூர்வாரி தேங்கிய கழிவுநீரை வடிய வைப்பார்களா?. -ஆர்.மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர், பாச்சல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 5:35 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#24577

பள்ளத்தில் வைத்த கருங்கல்லால் விபத்து

சாலை

வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பணிகள் நடந்து வருகிறது. சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கும் பணிகளும் நடக்கிறது. கிருஷ்ணகிரி மெயின் ரோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பெரிய பள்ளம் உள்ளது. அந்தப் பள்ளம் அருகே சாலையில் ஒரு திருப்பம் உள்ளது. அந்தத் திருப்பத்தில் வாகனங்கள் வந்து திரும்புகின்றன. அதன் அருகில் பெரிய பள்ளத்தில் கருங்கல்லை வைத்துள்ளனர். இரவில் வெளிச்சல் இல்லாத அந்த இடம் வழியாக வாகனங்களில் வருவோர் கருங்கல்லில் மோதி விபத்தில் சிக்குகிறார்கள்....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 1:03 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#24476

பட்டுப்போன மரத்தை அகற்றுவார்களா?

பட்டுப்போன மரத்தை அகற்றுவார்களா?மற்றவை

வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலம் 7-வது வார்டு வி.ஜி.ராவ் நகர் பி.செக்டார் மெயின் ரோட்டில் 25 அடி உயரத்தில் பட்டுப்போன வேப்பமரம் உள்ளது. அந்த மரம் எந்த நேரத்திலும் கீழே விழலாம் என்ற அச்சம் உள்ளது. அந்த வழியாக செல்லும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே பட்டுப்போன மரத்தை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்களா? -பொதுமக்கள், வி.ஜி.ராவ் நகர். காட்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 1:01 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#24474

கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்

கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்கழிவுநீர்

பேரணாம்பட்டு ஒன்றியம் சாத்கர் ஊராட்சி பங்களாமேடு சாலையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் அருகில், குடியாத்தம்-வீ.கோட்டா தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் கழிவுநீர் கால்வாய் அடைக்கப்பட்டு சாலையில் பல ஆண்டுகளாக கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுகுறித்து மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை தூர்வாரி கழிவுநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும். -நா.சே.பாஸ்கர்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 12:54 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#24464

சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம்

தண்ணீர்

குடியாத்தம் தாலுகா வளத்தூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. அதன் மூலம் 4 ஆயிரம் மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள். அந்தத் தொட்டியில் இருந்து சுகாதாரமன்ற முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. நீர்த்தேக்கத் தொட்டியை தூய்மைப்படுத்தி சுத்தமாக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -டி.ஜோதிகணேசன், வளத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 11:56 AM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#24451

சாலை சேதம்

சாலை சேதம்சாலை

சமீபத்தில் பெய்த மழையால் செங்கம்-போளூர் நெடுஞ்சாலை சேதம் அடைந்துள்ளது. செங்கத்தில் இருந்து குயிலம் கூட்ரோடு, புதுப்பாளையம், காஞ்சி கூட்ரோடு, பாலூர், கடலாடி உள்ளிட்ட பகுதிகளில் சாலை மோசமாக உள்ளது. வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். சேதமான சாலையை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சரி செய்வார்களா? -சிவச்சந்திரன், செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 11:47 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#24445

செடி, கொடிகள், புதர்களை அகற்றுவார்களா?

செடி, கொடிகள், புதர்களை அகற்றுவார்களா?மற்றவை

திருவண்ணாமலை ஒன்றியம் பழையனூர் ஊராட்சிக்கு உட்பட்டது ஆத்திப்பாடி கிராமம். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அங்குள்ள தெற்கு வீதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் பலர் சத்துணவு சாப்பிட வருகிறார்கள். அங்கன்வாடி மையம் இருக்கும் இடம் அதிகளவில் புதர்கள், செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் வளர்ந்துள்ள செடி, கொடிகள், புதர்களை அகற்ற வேண்டும். பாைதயை சரி செய்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 11:27 AM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#24444

கழிவுநீர் கால்வாய் சிலாப் சேதம்

கழிவுநீர் கால்வாய் சிலாப் சேதம்கழிவுநீர்

ஆம்பூர் ஏ.கஸ்பா அபுகான் தெருவில் புதிதாகக் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. அதன் மீது போடப்பட்ட சிமெண்டு சிலாபில் 3 இடங்களில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் நடந்து, வாகனங்களில் செல்வோர் தவறி விழும் நிலை உள்ளது. சிறுவர், சிறுமிகள் தடுமாறி விழும் அச்சம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய சிமெண்டு சிலாப் போட வேண்டும். -சுதாகர், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 11:12 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#24438

கல்லேரி கால்வாய் ஆக்கிரமிப்பு

கல்லேரி கால்வாய் ஆக்கிரமிப்புமற்றவை

கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள ஏரி 14 கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஏரி நிரம்பினால் உபரி நீர், அம்மாபாளையம் ஏரிக்கும், அழகுசேனை ஏரிக்கும் கால்வாய் மூலம் செல்லும். தற்போது அதற்கு தடை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. தண்ணீர் செல்லும் கல்லேரி பிரதான கால்வாய் கரையில் தற்போது தனி நபர்களால் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கரையைெயாட்டி தடுப்புச்சுவர்கள் ஆக்கிரமித்து கட்டுவதால், கால்வாய் குறுகி வருகிறது. எனவே இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும். -சாமிநாதன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick