Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 Feb 2023 4:28 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#28025

குடிநீர் தொட்டி பழுது

குடிநீர் தொட்டி பழுதுதண்ணீர்

கே.வி.குப்பம் தொகுதியில் முடினாம்பட்டு கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகில் ஒரு சிறு மின்விசை குடிநீர் தொட்டி உள்ளது. அந்தத் தொட்டி பழுதடைந்து 3 ஆண்டுக்கும் மேல் ஆகிறது. இதுநாள் வரை சரி செய்யவில்லை. ஊராட்சி மன்ற தலைவரிடமும், கவுன்சிலரிடமும் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது கோடைக்காலம் வர உள்ளது. மக்கள் நலன் கருதி சிறு மின்விசை தொட்டியை பழுது நீக்கி குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பொதுமக்கள், முடினாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 4:25 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#28024

கால்வாயை தூர்வார வேண்டும்

கால்வாயை தூர்வார வேண்டும்கழிவுநீர்

குடியாத்தம் நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள கழிவுநீர் கால்வாயில் ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டப்படுகின்றன. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயில் தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கால்வாயில் கழிவுநீர் தேங்காமல் இருக்க தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும்.-கல்யாணசுந்தரம், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 4:19 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#28022

செல்போன் டவர் அமைக்க வேண்டும்

மற்றவை

குடியாத்தம் அடுத்த மோர்தானா கிராமத்தைச் சுற்றிலும் 4 குக்கிராமங்கள் உள்ளன. அங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அங்கு செல்போன் டவர் இல்லாததால் செல்போன் சிக்னல் சரிவர கிடைப்பதில்லை. அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு நிலையம், மருத்துவம் என இவை சார்ந்த நடவடிக்கைகளுக்கு செல்போனில் தகவல் தெரிவிக்க முடிவதில்லை. எனவே மோர்தானா கிராமத்தில் செல்போன் டவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 4:17 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#28020

வெளிமாநிலத்தவர் அட்டகாசம்

மற்றவை

காட்பாடி பகுதியைச் சுற்றி உள்ள கல்புதூர், ராஜீவ்காந்திநகர், கிறிஸ்டியான்பேட்டை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இரவில் வந்து வீட்டின் கேட்டை தாண்டி உள்ள வருவதும், கதவை திறப்பதும், பூட்டை உடைப்பதுமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவரா அல்லது திருட வருபவரா? எனச் சந்தேகம் எழுந்துள்ளது. போலீசாரும், காவல் துறையினரும் இணைந்து காட்பாடி மற்றும் வேலூரில் மனநலம் பாதித்து சுற்றித்திரிபவர்களை பிடித்து காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 4:23 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#27830

சிதைக்கப்பட்ட கல்மேடை

மற்றவை

வாலாஜாவில் பல வருடங்களாக சுடுகாட்டின் நுழைவு வாயிலில் அரிச்சந்திரன் சிலை முன்பு இறந்தவரின் உடலை கிடத்தி இறுதிச் சடங்குகள் செய்யப்படுகிறது. அதன் பின்னரே சுடுகாட்டுக்குள் பிணத்தை எடுத்துச் சென்று புதைப்பர் அல்லது எரிப்பார்கள். இறந்தவர்களின் உடலை கிடத்தி வைக்கும் கல்மேடை இரண்டாக உடைக்கப்பட்டு சிதைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்தக் கல்மேடை சீரான முறையில் இல்லாமல் பாழடைந்து கிடக்கிறது. இதனால் இறந்தவரின் உடலை சரியான முறையில் வைத்து இறுதிச் சடங்குகள் செய்ய முடியவில்லை. உடனடியாக வாலாஜா நகராட்சி நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 4:21 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#27829

குடிநீர் குழாயில் உடைப்பு

குடிநீர் குழாயில் உடைப்புதண்ணீர்

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட சன்னதி தெருவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாகக்் குழாய் உடைந்து, அதில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி கொண்டே இருக்கிறது. இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் உடைந்த குழாயை சீரமைக்க அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வருகிற கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க உடனடியாக உடைந்த குழாயை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கண்ணன், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 4:19 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#27828

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்போக்குவரத்து

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட மேற்கு போர்டின் பேட்டை விநாயகர் கோவில் பகுதி சாலை ஒரு வழி போக்குவரத்தாகும். போக்குவரத்து நெருக்கடி அதிகமுள்ள இந்தப் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் நியமிக்கப்பட்டு பணியில் அமர்த்தினால் வாகனங்கள் சீராக செல்லும். வாரச்சந்தை முதல் திருத்தணி சாலை, தென் வன்னியர் வீதி பகுதிகளில் கார், பஸ், லாரி, இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்துப் போலீசார் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 4:11 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#27824

நாய்கள் தொல்லை

மற்றவை

ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் நாய்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இரவில் அந்த வழியாக செல்லும் வாகனங்களை பின்தொடர்ந்து துரத்தி கடிக்க பாய்கிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நாய்களை பிடித்து செல்ல வேண்டும்.-ஹேமந்த், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 4:09 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#27823

சாலையை சீர் செய்ய வேண்டும்

சாலை

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, ரெயில் நிலையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. பொதுமக்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க முன்வர வேண்டும்.-ஜியாவுதீன், சமூக ஆர்வலர், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 4:06 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#27822

சரியாக எரியாத உயர்கோபுர மின்விளக்கு

மின்சாரம்

திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையம் எதிரே கச்சேரி தெரு எல்லையில் நகராட்சி சார்பில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கை மாலை நேரத்தில் சரியாக எரியவிடுவது இல்லை. அப்படியே எரியவிட்டாலும் மேலே ஒரு விளக்கு மட்டும் எரிகிறது. மற்ற விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் அப்பகுதியில் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே உயர் கோபுர விளக்கை முறையாக எரியவிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 4:03 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#27821

நாய்கள் தொல்லை

மற்றவை

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுத்தித் தெரிகின்றன. விளையாடும் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் தெருக்களின் நடந்து செல்வதற்கு கூட பயப்படும் நிலை உள்ளது. இரவில் வாகனங்களில் செல்வோர்களை நாய்கள் விரட்டி செல்கின்றன. திருப்பத்தூர் பகுதியில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தட்சணாமூர்த்தி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 4:01 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#27820

முன்னெச்சரிக்கையுடன் சாலை பணியை மேற்கொள்வார்களா?

சாலை

நாட்டறம்பள்ளி பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களிலும் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தகுந்த ஆட்களை நிறுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி அனுப்பாமல் வேலை செய்து வருகின்றனர். இதனால் அந்த வழியே செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். நேற்று இதுபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் வேலை பார்த்ததால் அந்த வழியே சென்ற 2 பேர் கீழே விழுந்தனர். ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எனவே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick