Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 Feb 2023 5:06 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#28063

ஏரியில் குப்பைகள் கொட்டும் அவலம்

குப்பை

திருப்பத்தூர் அருகே உள்ள கருப்பனூர் ஏரி உள்ளது. இது, திருப்பத்தூர் டவுன் பகுதியை ஒட்டி உள்ளது. இந்தப் பகுதிகளில் கோழிக்கழிவுகள், குப்பைகள் ஆகியவை கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. ஏரி மாசு அடைகிறது. உடனடியாக இந்தப் பகுதியில் கேமராக்களை பொருத்தி குப்பைக் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.-எஸ்.ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 5:03 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#28062

பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புக்கடைகள்

மற்றவை

திருப்பத்தூர் பஸ் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தின் உள்ளே ஆக்கிரமிப்பு பழக்கடைகள், பூக்கடைகள் உள்ளன. இதனால் பயணிகள் நிற்பதற்கு கூட இடமில்லாமல் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும்.-கவுதம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 4:57 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#28061

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிசாலை

வேலூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே உள்ள சர்வீஸ் ரோடு குண்டும் குழியுமாக இருந்தது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குண்டு குழியுமாக இருந்த சாலையை சரி செய்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி ெதரிவித்துக்கொள்கிறோம்.-இல.குருசேவ், பேரூராட்சி கவுன்சிலர் நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 4:54 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#28060

மக்கள் பயன்பாட்டுக்கு வராத கழிவறை

மக்கள் பயன்பாட்டுக்கு வராத கழிவறைகழிவுநீர்

வாணியம்பாடி நீதிமன்ற வளாகம் அருகே பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்காக கழிப்பிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக திறக்கப்படாமலே உள்ளது. ஆனால் இதற்கு வெளிப்பகுதியிலும் உள் பகுதியில் மட்டும் வர்ணம் பூசும் பணிமட்டும் அவ்வப்போது நடந்து வருகிறது. இதனை நிரந்தரமாக திறந்து வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-அஸ்லம், வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 5:15 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#28059

பயன்பாடு இல்லாத குடிநீர் தொட்டி

பயன்பாடு இல்லாத குடிநீர் தொட்டிதண்ணீர்

ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் மக்கள் பயன்பாடு இல்லாத சிறுமின்விசை தொட்டி பழுதடைந்தும், மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டும் காணப்படுகிறது. இதனால் குடிநீருக்கு மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே கோடைக்காலம் நெருங்கி வரும் நிலையில் சிறுமின்விசை தொட்டியில் பழுது நீக்கி குடிநீர் வினியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். -அரவிந்தன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 4:49 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#28055

பாலம் கட்டும் பணியால் மக்கள் அவதி

பாலம் கட்டும் பணியால் மக்கள் அவதிசாலை

வந்தவாசி காந்தி ரோடு மற்றும் அச்சரப்பாக்கம் ரோடு சந்திப்பில் உள்ள பஜார் வீதி சீதாராமய்யர் தெருவில் சிறுபாலம் கட்டுவதற்கு பள்ளம் தோண்டி பல நாட்கள் ஆகி விட்டன. அந்த இடம் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். குடும்ப தலைவிகள் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்குவதற்கும் மற்ற இடங்களுக்கு செல்வதற்கும் அந்த வழியை பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த வழியில் செல்லாமல் மாற்றுப்பாதையில் சுற்றி செல்வதால் அவதிப்படுகின்றனர். சிறு பாலம் கட்டும் பணிைய உடனே முடித்து வழிைய சரி செய்து தர ேவண்டும்.-கந்தன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 4:47 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#28053

குடிநீர் கிணறுக்கு மூடி போட வேண்டும்

குடிநீர் கிணறுக்கு மூடி போட வேண்டும்தண்ணீர்

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது பறையம்பட்டு கிராமம். இங்கு ஏரிக்கரை அருகில் குடிநீர் கிணறு உள்ளது. அதன் மேற்பகுதியில் மூடி போடவில்லை. இதனால் குப்பைகள், மரத்தின் இலைகள் கிணற்றின் மீது விழுந்து அசுத்தமடைகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் கிணற்றுக்கு மூடி போட வேண்டும்.-சிவக்குமார், பறையம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 4:45 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#28049

பிச்சை எடுப்பவர்களால் தொல்லை

மற்றவை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கோவிலின் ராஜகோபுரத்தில் இருந்து சாமி சன்னதிக்கு வரும் வழியில் சில பெண்கள் மற்றும் முதியவர்கள் யாசகம் கேட்பதாக பிச்சை எடுத்து பக்தர்கள் பின்னால் தொடர்ந்து வந்து தொல்லை செய்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே இதுகுறித்து கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.-அண்ணாமலை, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 4:43 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#28045

குடிநீர் தொட்டி கட்டித்தர வேண்டும்

தண்ணீர்

சேத்துப்பட்டு தாலுகா சஞ்சீவிராயபுரம் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டிக் கொடுத்தால் தற்போது வரும் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் சமாளிக்கலாம். ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எங்கள் கிராமத்தில் குடிநீர் தொட்டி கட்டித்தர வேண்டும். -பாரதி, சஞ்சீவிராயபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 4:36 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#28035

பஸ் சேவை நீட்டிக்கப்படுமா?

போக்குவரத்து

ஆற்காடு முதல் பாணாவரம் வரை தடம் எண்:7டி என்ற டவுன் பஸ் இயக்கப்படுகிறது. அந்த பஸ் சேவையை பிள்ளையார்குப்பம், நெரிஞ்சந்தாங்கல் வழியாக போளிப்பாக்கம் வரை கிராமம் வரை நீட்டித்து இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஆர்.சுரேஷ், போளிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 4:34 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#28031

பயன்படுத்தப்படாத அடிபம்பு அகற்றப்படுமா?

தண்ணீர்

வாலாஜாபேட்டை-சோளிங்கர் ரோட்டில் தபால் நிலையம் அருகில் வாகன, மக்கள் நெரிசலும் அதிகம் உள்ள இடத்தில் சாலை ஓர நடைபாதை பகுதியிலேயே மக்களால் பயன்படுத்த முடியாத ஆழ்துளை கிணறு அடி பம்பு செயல்படாத நிலையில் பல வருடங்களாக உள்ளது. இதனால் மக்களுக்கு நடமாட தொந்தரவாக உள்ளது. உடனடியாக இந்த ஆழ்துளை கிணறு அடி பம்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வஜ்ஜிரவேல், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 4:30 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#28026

மின்விளக்கு பொருத்தப்படுமா?

மின்சாரம்

வாலாஜா பஸ் நிலையம் அருகில் பூக்கடை மார்க்கெட் திருப்பத்தில் உள்ள தாலுகா கச்சேரி தெருவில் போலீஸ் நிலையம் முன்பும், அதை அடுத்துள்ள கிளைச் சிறைச்சாலை முன்பும் உள்ள மின்கம்பங்களில் மின் விளக்குகள் எரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மின்விளக்குகளை பொருத்துவார்களா?-உத்திராபதி, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick