Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 March 2023 4:52 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#28267

சாலையோரம் பிணங்களை புதைக்கும் அவலம்

சாலை

வாலாஜாபேட்டை கருக்கல் மலை பக்கத்தில் உள்ள சுடுகாட்டு வழியாகத்தான் பஸ்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், செல்ல வேண்டும். அகலமாக இருந்த சாலை தற்போது ஆக்கிரமிப்பால் குறுகி விட்டது. அந்தச் சாலையில் ஒரு பஸ் மட்டும் போகும் அளவு உள்ளது. சாலையில் இருபுறமும் பிணங்கள் புதைக்கப்படுகின்றன. அதில் சமாதிகளும் எழுப்பப்படுகின்றன. இதனால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படுகிறது. வாலாஜா நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்பு இடங்களை மீட்க வேண்டும். இறந்தவர்கள் உடல்களை புதைக்கும் இடம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 4:44 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#28253

வீடுகள் முன்பு தேங்கும் கழிவுநீர்

வீடுகள் முன்பு தேங்கும் கழிவுநீர்கழிவுநீர்

வேலூர் மக்கான் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள தெரு ஒன்றில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் அடைப்பு காரணமாக அங்குள்ள வீடுகள் முன்பு கழிவுநீர் தேங்கி தெருவில் செல்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசு தொல்லையும் ஏற்படுகிறது. வீட்டின் உள்ளே இருப்பவர்கள் வெளியே வருவதற்கு சிரமப்படுகின்றனர். தெருவில் நடந்து செல்லும்பொது மக்களும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாய் அடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-செந்தாமரைகண்ணன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 4:43 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#28250

சாலையோரம் ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டும்

சாலை

விழுப்புரம்-மங்களூரு தேசிய நெடுஞ்சாலை பேரணாம்பட்டு புத்துக்கோவில் பகுதியில் இணைகிறது. கடந்த ஆண்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் பேரணாம்பட்டு பகுதியில் சாலை விரிவாக்கம் செய்வதற்காக புத்துக்கோவில் பகுதியில் இருந்து லாரி செட், பஸ் நிலையம், சாலப்பேட்டை, மத்தூர் வரை சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைத்தனர். மேலும் சாலையின் இருபக்கமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆனால் மீண்டும் சாலையோர கடைகள் முன்பு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவேசாலையின் இருபுறமும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 4:41 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#28247

உடைந்த சிலாப்புகள் சரி செய்யப்படுமா?

உடைந்த சிலாப்புகள் சரி செய்யப்படுமா?சாலை

பெங்களூரு-சென்னை அணுகுச்சாலையோரம் வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும் வழியில் உள்ள கழிவுநீர் கால்வாய் சிலாப்புகள் ஆங்காங்கே உடைந்த நிலையில் காணப்படுகிறது. சில சிலாப்புகள் உடைந்து கழிவுநீர் கால்வாயில் உள்ளே விழுந்து கிடக்கிறது. இதில் எதிர்பாராத விதமாக பொதுமக்கள், கால்நடைகள் தவறி விழுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இவற்றை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரோஜர், எல்.ஐ.சி. காலனி வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 4:40 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#28244

பயணிகள் அவதி

போக்குவரத்து

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் இரவு 10.10 மணிக்கு நாகப்பட்டினத்துக்கு ஒரே ஒரு பஸ் மட்டுமே உள்ளது. அதுவும் கும்பகோணம் போக்குவரத்துக்கழக பஸ் மட்டுமே உள்ளது. ஆனால் கடந்த 2 மாதமாக அந்தப் பஸ் சரியாக வருவதில்லை. அந்தப் பஸ்சை நம்பி வரும் பயணிகள் அவதிக்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது. பஸ் வருமா? வராதா? என உறுதியாக யாரும் தெரிவிப்பதில்லை. காரணம் கேட்டால் பஸ் நிலையத்தில் கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்துக்கு நேர அலுவலகம் இல்லை என்கிறார்கள். பஸ் வராது என உறுதியாகத் தெரிந்தால் பயணிகள் சிதம்பரம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 4:38 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#28240

கால்வாயை தூர்வார வேண்டும்

கால்வாயை தூர்வார வேண்டும்மற்றவை

பேரணாம்பட்டு பாண்டியன் வீதி-3 முத்துமாரியம்மன் கோவில் அருகில் உள்ள கட்டுக்கால்வாயில் மரக்கன்றுகள், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள், குப்பைகள் நிறைந்துள்ளன. இதனால் கழிவுநீர் செல்லாமல் தடைபடுகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து செடி, கொடிகளை அகற்றி கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும். -ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 4:34 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#28233

கழிவுநீரால் மக்கள் அவதி

கழிவுநீர்

ஜவ்வாதுமலையில் இருந்து உற்பத்தியாகும் மஞ்சளாறு போளூர் அருகே உள்ள ராமாபுரம் கிராமம் வழியாக செல்கிறது. மழைக்காலங்களில் இந்த ஆற்றில் தண்ணீர் செல்லும். மழை இல்லாத காலங்களில் இந்த ஆற்றை நடைபாதையாக ஊர் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கிராமத்தில் சிலர் கழிவுநீரை மஞ்சளாற்றில் விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் நடக்க முடியவில்லை. சிரமத்துக்கு ஆளாகின்றனர். கழிவுநீரை குழாய் வழியாக எடுத்துச்சென்று வேறு இடத்தில் விட பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பொதுமக்கள், ராமாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 4:31 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#28229

மாணவிகளுக்கு வெயிலில் சத்துணவு வினியோகம்

மாணவிகளுக்கு வெயிலில் சத்துணவு வினியோகம்மற்றவை

கண்ணமங்கலம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் சத்துணவு கூடத்தில் உணவு தயாரித்து, மாணவிகளுக்கு மதிய வேளையில் வினியோகம் செய்யப்படுகிறது. அப்போது கடும் வெயில் சுட்டெரிக்கிறது. அந்த வெயிலில் மாணவிகளை வரிசையில் நிற்க வைத்து சத்துணவு வினியோகம் செய்யப்படுகிறது. வெயில் ேநரத்தில் பசியால் மயக்கமடைந்து கீழே விழுந்து விடுவார்கள் என்ற அச்சம் உள்ளது. எனவே மாணவிகளுக்கு வெயில் பாதிப்பு இல்லாமல் பள்ளிக்கூட வராண்டாவில் அமர வைத்து உணவு வழங்க வேண்டும் என பெற்றோர் எதிர்ப்பார்க்கின்றனர். -சதீஷ், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 4:29 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#28227

போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்படும் கல்

போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்படும் கல்மற்றவை

கண்ணமங்கலம் புதிய சாலை திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பழைய பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கடை வியாபாரி தனது கடை முன்பு யாரும் வாகனங்களை நிறுத்தாமல் இருக்க பெரிய கருங்கல்லை கடை எதிரே போக்குவரத்துக்கு இடையூறாக வைத்துள்ளார். இதை அந்த வழியாக ரோந்து செல்லும் போலீசாரும் கண்டு கொள்வது இல்லை. பேரூராட்சி நிர்வாகம் சார்பாக கடைகள் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை யாரும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளனர். எனவே கடைகள் முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கடை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 4:27 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#28224

பன்றிகள் தொல்லை

பன்றிகள் தொல்லைமற்றவை

வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள அப்துல்லாபுரம் கிராமத்தில் விநாயகர் கோவில் தெருவிலும் பக்கத்தில் உள்ள தெருக்களிலும் பன்றி தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் துர்நாற்றமும் வீசுவதுடன் பன்றி காய்ச்சலும், நோய் பரவும் அபாயமும் உள்ளது. பன்றிகளை ஊருக்கு ஒதுக்குப்புறமாக வளர்க்க அறிவுறுத்த வேண்டும். இல்லையேல், பன்றிகளை பிடிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.-சக்கரபாணி, தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 4:25 PM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#28223

பருவத மலையில் குடிநீர் வசதி

தண்ணீர்

கலசபாக்கம் தாலுகா தென்மாதிமங்கலம் கிராமத்தில் பருவதமலை உள்ளது. பவுர்ணமி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கு சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். மலையேறும் பாதையில் மின் விளக்கு வசதி இல்லாததால் சூரிய மின் விளக்கு வசதி அமைத்துத் தர வேண்டும். மேலும் பக்தர்களுக்கு குடிநீர், மருத்துவ வசதி செய்து தர வேண்டும்.-அ.ஏழுமலை, கலசபாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 5:08 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#28064

தினத்தந்திக்கு பாராட்டு

கழிவுநீர்

ஆம்பூர் ஏ.கஸ்பா அபுகான் தெருவில் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. அதன் மீது போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்பில் 10க்கு மேற்பட்ட இடங்களில் பெரிய ஓட்டைகள் ஏற்பட்டு இருந்தன. இதுகுறித்து தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியால் நகராட்சி நிர்வாகம் புதிய சிமெண்டு சிலாப் அமைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். நடவடிக்கை எடுத்த நகராட்சி அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பொதுமக்கள் பாராட்டு ெதரிவித்தனர்.-மோகன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick