1 March 2023 4:29 PM GMT
#28227
போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்படும் கல்
கண்ணமங்கலம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கண்ணமங்கலம் புதிய சாலை திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பழைய பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கடை வியாபாரி தனது கடை முன்பு யாரும் வாகனங்களை நிறுத்தாமல் இருக்க பெரிய கருங்கல்லை கடை எதிரே போக்குவரத்துக்கு இடையூறாக வைத்துள்ளார். இதை அந்த வழியாக ரோந்து செல்லும் போலீசாரும் கண்டு கொள்வது இல்லை. பேரூராட்சி நிர்வாகம் சார்பாக கடைகள் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை யாரும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளனர். எனவே கடைகள் முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கடை முன்பு கருங்கல் வைப்பதை தடுக்க வேண்டும்.
-ஜீவானந்தம், கண்ணமங்கலம்.