1 March 2023 4:31 PM GMT
#28229
மாணவிகளுக்கு வெயிலில் சத்துணவு வினியோகம்
கண்ணமங்கலம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கண்ணமங்கலம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் சத்துணவு கூடத்தில் உணவு தயாரித்து, மாணவிகளுக்கு மதிய வேளையில் வினியோகம் செய்யப்படுகிறது. அப்போது கடும் வெயில் சுட்டெரிக்கிறது. அந்த வெயிலில் மாணவிகளை வரிசையில் நிற்க வைத்து சத்துணவு வினியோகம் செய்யப்படுகிறது. வெயில் ேநரத்தில் பசியால் மயக்கமடைந்து கீழே விழுந்து விடுவார்கள் என்ற அச்சம் உள்ளது. எனவே மாணவிகளுக்கு வெயில் பாதிப்பு இல்லாமல் பள்ளிக்கூட வராண்டாவில் அமர வைத்து உணவு வழங்க வேண்டும் என பெற்றோர் எதிர்ப்பார்க்கின்றனர்.
-சதீஷ், கண்ணமங்கலம்.