26 Feb 2023 4:19 PM GMT
#28022
செல்போன் டவர் அமைக்க வேண்டும்
குடியாத்தம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
குடியாத்தம் அடுத்த மோர்தானா கிராமத்தைச் சுற்றிலும் 4 குக்கிராமங்கள் உள்ளன. அங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அங்கு செல்போன் டவர் இல்லாததால் செல்போன் சிக்னல் சரிவர கிடைப்பதில்லை. அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு நிலையம், மருத்துவம் என இவை சார்ந்த நடவடிக்கைகளுக்கு செல்போனில் தகவல் தெரிவிக்க முடிவதில்லை. எனவே மோர்தானா கிராமத்தில் செல்போன் டவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.