Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 Feb 2023 3:58 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#27819

சுகாதார நிலையம் சீரமைக்கப்படுமா?

சுகாதார நிலையம் சீரமைக்கப்படுமா?மற்றவை

கே.வி.குப்பம் அருகே தேவரிஷிகுப்பம் அரசு துணை சுகாதார நிலையம் உள்ளது. இதன் மேல்பகுதியில் உள்ள பில்லை கற்கள் பெயர்ந்தும், கட்டிடத்தின் சில பகுதிகள் பழுதுப்பட்டும் உள்ளது. இதை உடனடியாக சீரமைப்பார்களா?-உதயகுமார், தேவரிஷிகுப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 3:54 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#27815

சிறு பாலம் பழுது

சிறு பாலம் பழுதுசாலை

பேரணாம்பட்டு ஆயக்கார வீதியின் கடைசியில் இந்துக்கள் சுடுகாடு உள்ளது. அதன் அருகில் சிறு பாலம் உள்ளது. அந்தப் பாலத்தின் அஸ்திவாரம் பாதிக்கப்பட்டு, ஒரு பக்கமாக சாய்ந்துள்ளது. இறந்தவர்களின் உடலை இந்தப் பாலத்தின் வழியாகத்தான் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். எனவே அசம்பாவிதம் நடக்கும் முன் நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடவடிக்கை எடுத்து பழுதான சிறு பாலத்தை புதுப்பித்துத் தர வேண்டும். இல்லையேல், புதிய பாலம் கட்டித்தர வேண்டும்.-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 3:50 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#27809

நடைபாதையை ஆக்கிரமிக்கும் வாகன ஓட்டிகள்

நடைபாதையை ஆக்கிரமிக்கும் வாகன ஓட்டிகள்சாலை

வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே கலெக்டர் அலுவலகம் செல்லும் சர்வீஸ் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேற்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் சிமெண்டு சிலாப் அமைக்கப்பட்டுள்ளது. அந்தச் சிமெண்டு சிலாப் நடைபாதையில் வாகன ஓட்டிகள் தங்களின் இருசக்கர வாகனங்களை வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் நடந்து செல்லும் பொதுமக்கள் ஒரு சிலர் சாலையில் நடக்கின்றனர். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொது மக்களுக்கு இடையூறு தரும் வகையில் நிறுத்தி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 3:48 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#27806

பஸ் போக்குவரத்துக்கு இடையூறு

பஸ் போக்குவரத்துக்கு இடையூறுபோக்குவரத்து

கண்ணமங்கலம் புதிய சாலை திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பஸ்கள் ஏரிக்கால்வாய் அருகே பழைய பஸ் நிறுத்தம், புதிய பஸ் நிலையத்தில் நின்று செல்கின்றன. புதிய பஸ் நிலையத்தில் பஸ் நிற்கும் இடத்தில் கார் உள்பட பல்வேறு வாகனங்களில் வருவோர் நடுரோட்டில் தங்கள் வாகனங்களை நிறுத்தி விடுவதால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படுகிறது. பஸ்சுக்காகக் காத்திருக்கும் பயணிகள் பயணம் செய்ய வசதிக்காகவும், போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் அனைத்தும் பஸ் நிலையம் உள்ளே சென்று திரும்பவும்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 3:47 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#27805

ஆட்டோக்களால் விபத்து

போக்குவரத்து

கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையம் எதிரே அவலூர்பேட்டை கிராமத்துக்கு செல்லும் சாலையின் ஆரம்ப நிலையிலேயே ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்து நடக்கிறது. எனவே ஆட்டோக்களை ரோட்டின் முன்னே 100 அடி தூரம் சென்று நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெ.முகம்மதுயூசுப், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 3:45 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#27804

அங்கன்வாடிக்கு சொந்த கட்டிடம் தேைவ

மற்றவை

சேத்துப்பட்டு தாலுகா ஆவணியாபுரம் அஞ்சல் சஞ்சீவிராயபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. அங்கன்வாடி மையத்துக்கு புதிதாக சொந்த கட்டிடம் கட்டித்தர மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பொதுமக்கள், சஞ்சீவிராயபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 3:36 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#27780

ஆற்றில் கழிவுநீர் கலப்பு

ஆற்றில் கழிவுநீர் கலப்புகழிவுநீர்

வந்தவாசியில் சுகநநி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் ஆறு மாசு அடைந்து வருகிறது. ஆற்றில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. மக்கள் குளிக்கவும், துணிகளை துவைக்கவும் ஆற்று நீரை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஆடு, மாடுகளும் தண்ணீர் குடிக்கின்றன. ஆற்று நீரில் கழிவுநீர் கலப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆற்றில் கழிவுநீரை விடுவோர் மீது சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கந்தன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 5:50 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#27659

அரசு டவுன் பஸ்கள் நின்று செல்லுமா?

போக்குவரத்து

வாலாஜா மற்றும் ராணிப்பேட்டையில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன. அந்த வழியாக ஆற்காட்டில் இருந்து சோளிங்கர் நோக்கி செல்லும் அனைத்து பஸ்களும், அதேபோல் சோளிங்கரில் இருந்து ஆற்காடு நோக்கி செல்லும் அனைத்து டவுன் பஸ்களும் மக்களின் நலன் கருதி பத்திரப்பதிவு அலுவலகங்கள் முன்பு நின்று செல்வதில்லை. பயணிகளின் நலன் கருதி அங்கு பஸ்கள் நின்று சென்றால் சாதாரண மக்களுக்கு பயனளிக்கும்.-மாரிமுத்து, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 5:47 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#27658

புதர்களை அகற்றுவார்களா?

புதர்களை அகற்றுவார்களா?மற்றவை

அரக்கோணம் சுவால்பேட்டை மேலாண்ட ஒப்பணக்கார தெருவின் இறுதியில் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே அசோக் நகர் செல்லும் வழியில் அங்கன்வாடி மையம் புதர்களால் சூழப்பட்டுள்ளது. அந்த பகுதியில் கொடிய விஷமுள்ள பூச்சிகள் உள்ளதால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் அந்த இடத்தில் உள்ள புதர்களை அகற்றி சுத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சந்தானம், சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 5:37 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#27656

சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?

சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?மற்றவை

நெமிலி அருகில் உள்ள வேப்பேரி கிராமத்தில் 2011-12-ம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் மகளிர் மற்றும் குழந்தைகள் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் ரூ.1.63 லட்சத்தில் கட்டப்பட்டது. சிறிது காலம் மக்கள் பயன்பாட்டில் இருந்தது. இடையே, சுகாதார வளாகத்தை மூடி விட்டனர். அங்குள்ள மக்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். சுகாதார வளாகத்தை திறக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கணேசன், வேப்பேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 5:35 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#27655

பன்றிகள் தொல்லை

பன்றிகள் தொல்லைமற்றவை

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அரசு கால்நடை மருத்துவமனை அருகே திட மற்றும் திரவ கழிவுநீர் கிடங்கில் மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் எனத் தரம் பிரிக்கப்படுகிறது. அங்கு குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை ஏராளமான பன்றிகள் கிளறி விடுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. பன்றிகள் தூய்மைப் பணியாளர்களை அச்சுறுத்துகின்றன. நகராட்சி நிர்வாகம் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மாதவன், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 5:28 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#27653

மூடி கிடக்கும் சுகாதார வளாகம்

மூடி கிடக்கும் சுகாதார வளாகம்மற்றவை

வாணியம்பாடி கச்சேரி ரோட்டில் உள்ள நீதிமன்றம் அருகே பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக கட்டப்பட்ட கழிவறை கட்டிடம் இன்னும் பயன்பாட்டுக்கு வராமலேயே உள்ளது. 4 ஆண்டுகளில் 3 முறை வர்ணம் மட்டுமே பூசப்பட்டுள்ளது. நீதிமன்றத்துக்கு வரும் மாற்றுத்திறனாளிகளும், பெண்களும் கழிப்பிடத்துக்காக இடம் தேடி அலைய வேண்டி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனை திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.-ஜான்சிராணி, வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick