Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 Feb 2023 5:26 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#27652

கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

போக்குவரத்து

திருப்பத்தூரில் இருந்து நாட்டறம்பள்ளிக்கு புதுப்பேட்டை மற்றும் தாமலேரிமுத்தூர் வழியாக பஸ்கள் சென்று வருகின்றன. ஆனால் புதுப்பேட்டை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஆனால் திருப்பத்தூரில் நாட்டறம்பள்ளிக்கு புதுப்பேட்டை வழியாக ஒருசில பஸ்கள் சில நேரங்களில் மட்டுமே சென்று வருகின்றன. மற்ற நேரங்களில் அப்பகுதி மக்கள் ஷேர் ஆட்டோவை தான் நம்பி பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஷேர் ஆட்டோவில் கட்டணமாக குறைந்தபட்சம் ரூ.30 வசூல் செய்கின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 5:25 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#27651

கழிவுநீர் கால்வாய் சிலாப் சேதம்

கழிவுநீர்

ஆம்பூர் ஏ.கஸ்பா அபுகான் தெருவில் புதிதாகக் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. அதன் மீது போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்பில் 10-க்கு மேற்பட்ட இடங்களில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. குறுகிய தெரு என்பதால் கார்கள் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து உடைந்த சிமெண்டு சிலாப்களை மாற்றி அமைக்க வேண்டும்.-மோகன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 5:20 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#27645

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்போக்குவரத்து

திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே காலை, மாலை வேளையில் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரி செல்வோர் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து சிக்னலை அமைத்து நெரிசலை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-ஜியாவுதீன், சமூக ஆர்வலர், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 5:00 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#27601

தினத்தந்திக்கு பாராட்டு

தினத்தந்திக்கு பாராட்டுசாலை

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சர்வீஸ் சாலை ஓரம் கழிவுநீர் கால்வாயின் மேற்பகுதியில் உள்ள கான்கிரீட் சிலாப் உடைந்து விழுந்தது. அது குறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடைந்து கிடந்த சிமெண்டு சிலாப் பள்ளத்தை சரி செய்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.-மாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 4:58 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#27600

அடிபம்பை சரி செய்வார்களா?

அடிபம்பை சரி செய்வார்களா?தண்ணீர்

வேலூர் சத்துவாச்சாரி மந்தைவெளியில் இருந்து பாலாறு செல்லும் வழியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை அருகில் அடிபம்பு உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், அடிபம்பின் மேற்பகுதியுடன், கைப்பிடியை சேர்த்து சிலர் திருடி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இறுதிச்சடங்குகள் செய்ய செல்லும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வந்த இந்த அடிபம்பு செயல்படவில்லை. எனவே இதனை பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மோகன்தாஸ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 4:55 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#27599

விளையாட்டு மைதானத்தில் வளர்ந்த செடி, கொடிகள்

விளையாட்டு மைதானத்தில் வளர்ந்த செடி, கொடிகள்பூங்கா

ஆரணி கோட்டை மைதானத்தில் அடர்ந்த காடு போல விஷ செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அங்கு நடை பயிற்சிக்கு வரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். விளையாட்டுத் துறையோ, நகராட்சி நிர்வாகமோ, மாவட்ட நிர்வாகமோ உரிய நடவடிக்கை எடுத்து மைதானத்தை சுத்தம் செய்து தர ேவண்டும்.-சுரேந்திரன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 4:50 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#27598

ஆரம்ப சுகாதார நிலையம் தேவை

மற்றவை

சேத்துப்பட்டு தாலுகா சஞ்சீவிராயபுரம் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு நோய்வாய் பட்டால் அருகில் உள்ள நகரங்களுக்கு தான் மருத்துவச் சிகிச்சைக்கு செல்ல வேண்டும். எனவே எங்கள் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பொதுமக்கள், சஞ்சீவிராயபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 4:48 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#27597

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்

மற்றவை

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் அவலூர்பேட்டை சாலை, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திரவுபதியம்மன் கோவில் வீதி ஆகிய சந்திப்புகளில் கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் இயங்கி வந்த கண்காணிப்பு கேமராக்களை சிலர் உடைத்து விட்டனர். அந்தக் கண்காணிப்பு கேமராக்களை மீண்டும் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-எஸ்.பூவரசன், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 4:46 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#27596

இரும்புக்கம்பி சேதம்

இரும்புக்கம்பி சேதம்சாலை

செங்கத்தில் பிரசித்தி பெற்ற காக்கங்கரை விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள கால்வாய், இரும்புக்கம்பிகள் கொண்டு மூடப்பட்டுள்ளது. அந்த இரும்புக் கம்பிகள் பல வருடங்களாக பராமரிப்பின்றி துருப்பிடித்து வளைந்தும், சேதம் அடைந்தும் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் காக்கங்கரை விநாயகர் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள கால்வாய் மீது அமைக்கப்பட்ட இரும்புக்கம்பிகளை மாற்றி புதிதாக அமைத்துத்தர வேண்டும்.-குமரன், செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 4:44 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#27595

கண்காணிப்பு கேமராக்கள் பழுது

கண்காணிப்பு கேமராக்கள் பழுதுமற்றவை

செங்கம் நகரில் பல்வேறு இடங்களில் திருட்டுச் சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கவும், கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டில் இல்லை. ஒருசில இடங்களில் கேமராக்கள் பழுதடைந்து காட்சி பொருளாக உள்ளன. எனவே இவற்றை பழுது நீக்கி பயன்பாட்டுக்குக் கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சிங்காரவேல், செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 5:38 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#27398

ரவுண்டானா அமைப்பார்களா?

சாலை

வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக ஊத்தங்கரை வரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை மாற்றப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. திருப்பத்தூர் நகருக்கு வரும் பஸ்கள் மெயின் ரோட்டில் சென்று வளைய வேண்டிய சூழ்நிலையும், அதே போல் பஸ்கள் வெளியே வரும்போது கலெக்டர் அலுவலகம் எதிரில் சென்று அடைய வேண்டிய நிலையில் தற்போது தேசிய நெடுஞ்சாலை என்பதால் ஏராளமான வாகனங்கள் இந்த வழியாக செல்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பகுதிகளில் பெரிய ரவுண்டனா ஏற்படுத்த வேண்டும் அல்லது பஸ் நிலையத்தை வேறு...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 5:30 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#27394

நாய்கள் தொல்லை

மற்றவை

ஆம்பூர் நகர பகுதியில் தெரு நாய்கள் அதிகரித்துள்ளன. சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள் அந்த வழியே செல்வோரை துரத்திச்சென்று கடிக்கின்றன. இரு சக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் சிலர் கீழே விழுந்து காயமடைகின்றனர். பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளையும் துரத்துவதால் மக்கள் சாலையில் நடக்கவே அஞ்சுகின்றனர். வாரம் 2, 3 சிறுவர்கள் நாய் கடித்ததற்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி ஆம்பூர் நகரில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து காப்புக்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick