Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 April 2023 5:42 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#30426

டிரான்ஸ்பார்மரால் அச்சுறுத்தல்

டிரான்ஸ்பார்மரால் அச்சுறுத்தல்மின்சாரம்

வாணியம்பாடி-ஆலங்காயம் ரோட்டில் நிம்மியம்பட்டு பஸ் நிலைய பகுதியில் மின்சார டிரான்ஸ்பாா்மா் உள்ளது. இது, போக்குவரத்துக்கும், பஸ் பயணிகளுக்கும், ெபாதுமக்களுக்கும் இடையூறாக மற்றும் அச்சுறுத்தலாக உள்ளது. பள்ளி மாணவ-மாணவிகள் பஸ்சுக்காக அந்த இடத்தில் தான் காத்திருக்கின்றனர். பெரிய விபத்து ஏற்படும் முன் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் வேறு இடத்தில் மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-மாணவ, மாணவிகள், நிம்மியம்பட்டு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 5:38 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#30425

உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மற்றவை

ரத்தினகிரி, பூட்டுத்தாக்கு, அரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகள், சில்லறை விலை கடைகளில் சிறிய அளவிலான பாட்டில்களில் அடைத்து விற்கும் குளிர்பானங்கள், பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்கும் குளிர்பானம், மோர் ஆகியவற்றை காலாவதியானதை விற்பனை செய்கிறார்கள். இதுகுறித்து உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-திவ்யா, பூட்டுத்தாக்கு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 5:27 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#30424

பத்திரப்பதிவு அலுவலகம் மாற்றப்படுமா?

மற்றவை

ராணிப்பேட்டையில் இணை சார்பதிவாளர் அலுவலகம்-1 மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகம் கொண்டுவரப்பட்டது. மாவட்ட பதிவாளர் அலுவலகம் கலெக்டர் அலுவலகத்திலேயே இயங்கி வருகிறது. ஆனால், இணை சார் பதிவாளர் அலுவலகம்-1 ராணிப்பேட்டை பகுதியில் உள்ள பாலாறு கரை ஓரம் பாதுகாப்பு இல்லாத இடத்தில் சுடுகாடு அருகில் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கும், அலைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர். இந்தப் பத்திரப்பதிவு அலுவலகத்துக்குச் சென்று வர போக்குவரத்து வசதிகள் இல்லை. பெண்கள் கழிப்பறை வசதியும் கிடையாது....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 5:26 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#30421

தற்காலிக நிழற்குடை வசதி தேவை

தற்காலிக நிழற்குடை வசதி தேவைதண்ணீர்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் குழாய் உள்ளது. அங்கு வரும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு ஒரு நிழற்குடை வசதி இல்லை. கொளுத்தும் வெயிலில் பச்சிளம் குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியோர் சிரமப்படுகின்றனர். குடிநீர் குழாய் பகுதியில் தற்காலிக நிழற்குடை வசதியை ஏற்படுத்தி கொடுக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும். -சு.சுந்தரமூர்த்தி, அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 5:23 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#30417

கழிவுநீர் கால்வாய் வசதி

கழிவுநீர் கால்வாய் வசதிகழிவுநீர்

வாலாஜா தாலுகா அலுவலகம் எதிரில் குப்பைகள் குவிந்துள்ளது. கழிவுநீரும் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் கால்வாய் கட்டாமல் இருப்பதால் கழிவுநீர் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய் கட்டித்தர முன்வர வேண்டும்.-த.நித்தியானந்தம், காரை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 5:20 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#30416

பழுதான மின் கம்பம் மாற்றப்படுமா?

பழுதான மின் கம்பம் மாற்றப்படுமா?மின்சாரம்

அரக்கோணம் சுவால்பேட்டை திருத்தணி பிரதான சாலையில் டிரான்ஸ்பார்மர் அருகே உள்ள மின் கம்பத்தின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பம் முழுவதும் விரிசல் ஏற்பட்டுள்ளது. உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிகிறது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் அலட்சியமாக உள்ளனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் மின் கம்பம் மாற்றப்படுமா?-சுரேந்தர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 5:16 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#30414

பள்ளத்தை மூட வேண்டும்

பள்ளத்தை மூட வேண்டும்சாலை

பள்ளிகொண்டா-குடியாத்தம் செல்லும் சாலையில் மழை நீர் கால்வாய் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் 80 சதவீத பணி நடந்துள்ளது. ஆனால் சில இடங்களில் 10 அடி நீளத்துக்கு அந்தப் பள்ளத்தை மூடாமல் வைத்துள்ளனர். அந்தப் பள்ளத்தில் மழைநீர், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இரவில் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் தவறி பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் மீதமுள்ள பள்ளங்களை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வேலாயுதம், பள்ளிகொண்டா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 5:10 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#30409

வணிக வளாகம் ஏலம் விடப்படுமா?

வணிக வளாகம் ஏலம் விடப்படுமா?மற்றவை

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆஞ்சநேயர் கோவில் பக்கத்தில் மாநகராட்சி சார்பில் வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வணிக வளாக கட்டிடத்தில் உள்ள கடைகள் ஏலம் விடப்படாததால் சமூக விரோதிகள் அங்கு மது குடித்துவிட்டு காலிப்பாட்டில்களை வீசி செல்கின்றனர். இதனால் அந்த வணிக வளாகம் குப்பைகளாகக் காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வணிக வளாகத்தை ஏலம் விட வேண்டும்.-மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 5:07 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#30406

மணல் திட்டுகள் அகற்றப்படுமா?

மணல் திட்டுகள் அகற்றப்படுமா?மற்றவை

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். அங்குள்ள டிக்கெட் கவுண்ட்டர் அருகே பயணிகள் அமரும் இருக்கையின் பக்கத்தில் வெகு நாட்களாக மணல் திட்டுகள் காணப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அந்த மணலின் மேல் பகுதியில் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளன. பயணிகள் ஒரு சிலர் அங்கு எச்சில் உமிழ்ந்து செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் மணல் திட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தாமரைக்கண்ணன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 4:59 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#30398

பகலில் எரியும் மின்விளக்கு

மின்சாரம்

பேரணாம்பட்டு ஏரிக்குத்தி அருகே பேரணாம்பட்டு-மேல்பட்டி நெடுஞ்சாலையில் உள்ள தெரு மின் விளக்குகள் பகல் நேரத்திலும் எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் தேவையில்லாமல் மின்சார செலவு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பகலில் மின்விளக்கு எரிவதை தடுக்க வேண்டும்.-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 4:56 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#30393

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்துக்கு இடையூறுபோக்குவரத்து

கண்ணமங்கலம் புதிய பஸ் நிலையத்தில் வேலூர், திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் சாலையில் நின்று செல்வதால் பயணிகளும் சாலையோரம் நின்று பயணம் செய்து வருவது அறிந்ததே. ஆனால் ஆரணி, ஆற்காடு பகுதியில் இருந்து வரும் சில டவுன் பஸ்கள் போக்குவரத்துக்கு இடையூறாக பஸ் நிலையத்தில் உள்ள பொதுமக்கள் செல்லும் வழியில் நிறுத்தி விடுவதால் அந்த வழியே யாரும் நடந்து செல்ல முடியவில்லை. குறுகிய இடத்தில் பஸ்களை நிறுத்தக் கூடாது என போலீசார் அறிவுறுத்த வேண்டும்.-சிவானந்தம், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 4:57 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#30389

சாலையோர ஆக்கிரமிப்புகள்

சாலையோர ஆக்கிரமிப்புகள்சாலை

வேலூர், திருவண்ணாமலை செல்லும் மெயின்ரோடாக கண்ணமங்கலம் புதிய சாலை உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. கண்ணமங்கலம் பகுதியில் சாலையோரம் ஆக்கிரமிப்புகள் உள்ளன. வியாபாரிகள் தங்களின் கடையில் விற்கும் பொருட்களை சாலையோரம் வைக்கின்றனர். கடையின் விளம்பர பலகைைய சாலையோரம் ைவப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் சாலையில் நடந்து செல்வோர், மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் நடுரோட்டில் செல்கின்றனர். தற்போது கண்ணமங்கலம் புதிய சாலை தூத்துக்குடி-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையாக...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick