Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 April 2023 5:10 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#30506

தபால் நிலையம் இல்லாத கலெக்டர் அலுவலகம்

மற்றவை

வேலூர், திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் தபால் நிலையம் இயங்கி வருகிறது. ஆனால் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மட்டும் தபால் நிலையம் இல்லை. இங்கு வருபவர்கள் ராணிப்பேட்டை தொழிற்பேட்டை தலைமை தபால் நிலையம் அல்லது ராணிப்பேட்டை தலைமை தபால் நிலையம் செல்ல வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு சிரமமாக உள்ளது. எனவே ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் தபால் நிலையம் ஏற்படுத்த வேண்டும்.-ரா.செங்குட்டுவன், பெரியார்நகர், ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 11:32 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#30505

நாய்களை பிடிக்க வேண்டும்

மற்றவை

ஆற்காட்டில் உள்ள வேலூர் மெயின் ரோடு, அண்ணா சிலை, மாசா பேட்டை ஆகிய பகுதிகளில் தெரு நாய்கள் அதிகமாக உள்ளன. கடந்த ஒரு வாரங்களுக்கு முன் இப்பகுதியில் 2 சிறுவர்கள் உள்பட 7 பேரை நாய் கடித்தது. நகராட்சி நிர்வாகம் நாய்களை பிடித்தால் நன்றாக இருக்கும்.-சுமதி, ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 11:28 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#30504

ஆபத்தான கிணறு

ஆபத்தான கிணறுமற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுதாக்கு அருகே திம்மனாஞ்ே்சரி குப்பத்தில் உள்ள ரத்தினபுரீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் வழியில் சுற்றுச்சுவர் இன்றி ஆபத்தான நிலையில் கிணறு ஒன்று உள்ளது. அவ்வழியாக பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் நடந்து செல்கின்றனர். அதுபோக இரவு நேரங்களில் கோவிலுக்கு செல்பவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆபத்தான கிணறை சுற்றி சுவர் எழுப்பி மூடி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஹாி, பூட்டுத்தாக்கு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 11:24 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#30503

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்தண்ணீர்

வேலூர் மாநகராட்சி 47-வது வார்டு சலவன்பேட்டை லட்சுமிபுரம் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக குடிநீர் வீணாக வெளியேறுகிறது. குடிநீர் வெளியேறுவதை யாரும் கண்டு கொள்வது இல்லை. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடைந்த குழாயை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.-சதீஷ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 5:11 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#30502

பட்டா வழங்கப்படுமா?

மற்றவை

பேரணாம்பட்டை அடுத்த அரவட்லா ஊராட்சியைச் சேர்ந்த பாஸ்மார்பெண்டா கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலம் சுமார் 100 ஏக்கர் உள்ளது. அதில் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச பட்டா வேண்டி முதல்-அமைச்சர் தனிப்பிரிலும், மாவட்ட கலெக்டர் தலைமையில் நடக்கும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திலும், ஜமாபந்தியிலும் கடந்த 5 ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறோம். இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்க முன் வர வேண்டும்.-நா.சே.பாஸ்கர், சமூக ஆர்வலர், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 11:21 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#30501

சாலையோரம் வீசப்படும் இறைச்சி கழிவுகள்

சாலையோரம் வீசப்படும் இறைச்சி கழிவுகள்குப்பை

கே.வி.குப்பம் தாலுகாவில் குடியாத்தம்-காட்பாடி தேசிய நெடுஞ்சாலையின் இரு பக்கங்களிலும் ஆங்காங்கே கோழி இறைச்சி கழிவுகள் மூட்டை மூட்டைகளாக கட்டி கொண்டு வந்து வீசப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் பயணிகளுக்கு துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சாலையோரம் இறைச்சி கழிவுகள் வீசுவதை தடுக்க வேண்டும்.-மணியன், கே.வி.குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 5:12 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#30500

தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?

மற்றவை

அணைக்கட்டு பகுதி முழுக்க முழுக்க கிராமங்களை உள்ளடக்கியதாகும். இந்த பகுதியில் அவசர காலங்களில் உதவிக்கு வர தீயணைப்பு நிலையம் இல்லை. வேலூரில் இருந்து தான் தீயணைப்பு வாகனமும், வீரர்களும் வர வேண்டிய நிலை உள்ளது. எனவே அணைக்கட்டு பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்.-ஊ.வே.குமுதாபெருமாள் ரெட்டியார், ஊசூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 11:17 AM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#30499

நெல்கொள்முதல் நிலையத்துக்கு இடம் வேண்டும்

மற்றவை

வேலூர் ஒன்றியம் பூதூர் ஊராட்சி மன்ற கட்டிடத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்த நெல் கொள்முதல் நிலையத்துக்கு பூதூர் கிராமம் கோவிந்தரெட்டிபாளையம் புதிய பள்ளிக்கூடம் எதிரில் புதிய கட்டிடம் கட்ட இடம் ஒதுக்கி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-எஸ்.கவிதா, ஊ.ம.த. பூதூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 6:04 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#30450

பள்ளத்தை மூட வேண்டும்

பள்ளத்தை மூட வேண்டும்சாலை

வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக ஊத்தங்கரை வரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்தச் சாலையின் நடுவே மின்கம்பம் நட பள்ளம் தோண்டப்பட்டது. மின்கம்பம் நட்டும் சில இடங்களில் பள்ளத்தை சரியாக மூட வில்லை. அந்த வழியாக செல்வோர் பள்ளத்தில் விழுந்து செல்லும் அவலம் நடக்கிறது. சாலையின் நடுவே தோண்டப்பட்ட பள்ளத்ைத மூட வேண்டும்.-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 5:52 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#30449

நாய்களை பிடிக்க வேண்டும்

மற்றவை

திருப்பத்தூர் நகரப் பகுதிகளில் மக்கள் அதிகமாக நடமாடும் சாலைகளில் தெரு நாய்கள் அதிகமாக உள்ளது. இதனால் சிறுவர்கள், பெண்கள், வயதானவர்களை பெரிதும் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. பள்ளிக்கு செல்லும் சிறிய குழந்தைகள் பயத்துடன் சென்று வருகிறார்கள். வரும் நாட்களில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை வருகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தட்சிணாமூர்த்தி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 5:47 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#30447

தினத்தந்திக்கு நன்றி

தண்ணீர்

நாட்டறம்பள்ளிைய அடுத்த வெலக்கல்நத்தம் இ.லட்சுமிபுரம் பகுதியில் சிறு மின்விசை தொட்டியின் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறியது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக உடைந்த குழாய் சீரமைக்கப்பட்டது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.-இல.குருசேவ். பேரூராட்சி கவுன்சிலர் நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 5:44 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#30432

நாய்கள் தொல்லை

மற்றவை

ஆம்பூர் காதர்பேட்டை பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இரவில் அந்த வழியாக செல்லும் வாகனங்களை பின்தொடர்ந்து ஓடி கடிக்க பாய்கின்றன. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மகேஷ், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick