உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2022-09-09 11:12 GMT

திருவண்ணாமலை-போளூர் சாலையில் உள்ள அண்ணா நுழைவுவாயில் அருகில் போளூர் சாலை, காஞ்சி சாலை, திருவண்ணாமலை சாலை ஆகியவை இணையும் பகுதி ஆகும். இந்தப் பகுதி பகல், இரவு நேரங்களில் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்தப் பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்காததால் இரவில் போதிய வெளிச்சம் இல்லாததால் எதிரில் வரும் இருசக்கர வாகனங்கள் தெரியாமல் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்தப் பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைப்பார்களா?

-அருணாச்சலம், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்