புகார் எதிரொலி

Update: 2026-01-18 10:31 GMT

திருவள்ளூர் மாவட்டம், வரதராஜபுரத்தில் உள்ள தெருக்களில் அமைக்கப்பட்ட மின்கம்பங்கள் குடியிருப்புகளை உரசும் நிலையில் இருந்தது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் அப்பகுதி மக்களிடையே நிலவியது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட மின்சாரவாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக மின்சார ஒயர்களை தகுந்த வகையில் அப்புறப்படுத்தினர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்