தர்மபுரி-பென்னாகரம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய புறநகர் பஸ் நிலையத்திற்கு பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் வாகன போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த பகுதிக்கு சென்று வரும் சாலை போதிய வெளிச்சமின்றி காணப்படுகிறது. இதனால் குமாரசாமிப்பேட்டை மேம்பாலம் முடியும் பகுதியில் இருந்து தொடங்கி சோகத்தூர் கூட்டு ரோடு வரை இரு வழி சாலையின் மையத் தடுப்பு பகுதியில் மின்விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.