எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2026-07-19 07:31 GMT

ராஜாக்கமங்கலம் சந்திப்பு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகள் கடந்த ஒருமாத ஒளிராமல் காணப்படுகிறது. இதனால், அந்த பகுதி 4 முனை சந்திப்பாக இருப்பதால் மாலை மற்றும் இரவு நேரங்களில் கேரளத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் இந்த சாலைகளை பயன்படுத்துகிறார்கள். தற்போது இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்து ஒளிராமல் இருக்கும் உயர்கோபுர விளக்கை அகற்றி விட்டு புதிய விளக்குள் பொருத்தி ஒளிரவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாகராஜன்,ராஜாக்கமங்கலம்.

மேலும் செய்திகள்