உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அதன் அருகே புதிய பஸ் நிலைய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து பழனி, திண்டுக்கல், மதுரை, நெல்லை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக எப்போதும் பஸ் நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த நிலையில், பஸ் நிலையத்தில் உள்ள மின் விளக்குகள் ஒளிராததால் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக மூத்த குடிமக்கள் இருளில் நடந்து சென்று பஸ்சில் ஏறும் போது நிலை தடுமாறி வருகிறார்கள். எனவே புதிய பஸ் நிலையத்தில் உள்ள மின்விளக்குகளை ஒளிர செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.