மின் கோபுர விளக்கு எரியவில்லை

Update: 2026-09-06 19:49 GMT

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட கசிநாயக்கன்பட்டி வக்கீல் ஐயர் தோப்பு பஸ் நிறுத்தத்தில் உள்ள மின் கோபுர விளக்குகள் பல மாதங்களாக எரியாமல் உள்ளது. இரவில் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவில் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்கள், முதியவர்கள் அச்சத்துடன் நிற்க வேண்டிய நிலை உள்ளது. அங்கு விபத்துகள் நடக்கும் பகுதியாக உள்ளது. அந்த உயர் கோபுர மின்விளக்கை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.மூர்த்தி, சமூக ஆர்வலர், செவ்வாத்தூர். 

மேலும் செய்திகள்