கோவை மணியகாரம்பாளையம் இளங்கோ நகரில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் சரிவர ஒளிருவது இல்லை. பெரும்பாலான ெதருவிளக்குகள் பழுதாகி கிடக்கின்றன. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக சென்று வருவோருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சத்துடன் அந்த வழியாக சென்று வருகின்றனர். எனவே தெருவிளக்குகளை உடனடியாக பழுது நீக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.