உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி மெயின்ரோடு வரை சாலையின் நடுவே மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் சாலையில் உள்ள பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் இருளை பயன்படுத்தி வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்களும் நடக்க வாய்ப்புள்ளது. எனவே அப்பகுதியில் மின்விளக்குகள் அமைத்து தர மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.