கரூர் மாவட்டம் புகழூர் மற்றும் நொய்யல் துணை மின் நிலையங்கள் மூலம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதிகளில் தற்போது திடீர் திடீரென அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வருவதால் பொதுமக்களும், வணிக நிறுவனத்தினரும், தொழிற்சாலை உரிமையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதிகளில் தடையின்றி சீரான மின் வினியோகம் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.