தெக்குறிச்சி பகுதியில் காமராஜர் தெருவில் சாஸ்தான்கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் சாலையோரத்தில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்கு பழுதடைந்து ஒளிராமல் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாதசாரிகள் நலன்கருதி பழுதடைந்த மின்விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி ஒளிர வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பார்த்தசாரதி, தெக்குறிச்சி.