ஈரோடு கொங்காலம்மன் கோவில் 2-வது வீதியில் மின்கம்பத்தின் அடிப்பகுதி உடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. அது தெரியாமல் யாராவது தொட்டால் அவர்களை மின்சாரம் தாக்க வாய்ப்புள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?