சேதமான மின்கம்பம்

Update: 2026-07-19 18:43 GMT

திருவண்ணாமலை-காஞ்சி ரோடு குபேர நகர் 2-வது மெயின் ரோடு குபேர பெருமாள் கோவிலில் திரும்பும் முனையில் ஒரு மின்கம்பம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பலமான காற்று அடிக்கும் போது மின்கம்பத்தில் இருந்து பொறி பறக்கிறது. மேலும் மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் உடைந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே மின்வாரியத்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கண்ணன், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்