அடிக்கடி மின்தடை

Update: 2026-09-13 16:35 GMT

மதுரை நகர் ஜெய்ஹிந்த்புரம் சுந்தர்ராஜபுரம் டி.வி.எஸ். நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சில நாட்களாக காலை மற்றும் இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் காலை நேரங்களில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்வதில் தடை ஏற்படுவதுடன், இரவில் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியோர்கள் தூக்கமின்றி சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் நிலவி வரும் தொடர் மின்வெட்டை சரி செய்ய நிரந்தர தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்