‘தினத்தந்தி’க்கு நன்றி

Update: 2026-09-13 10:18 GMT

கோவை மாநகராட்சி 92-வது வார்டுக்கு உட்பட்ட செந்தமிழ் நகரில் பள்ளிவாசல் செல்லும் வழியில் தெருவிளக்குகள் ஒளிராமல் கிடந்தது. இதனால் இரவில் அந்த பகுதி இருள் சூழ்ந்து கிடந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ நாளிதழில் புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக அங்கு பழுதாகி கிடந்த தெருவிளக்குகளை அதிகாரிகள் சீரமைத்து மீண்டும் ஒளிர வைத்தனர். இதற்கு காரணமான ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.

மேலும் செய்திகள்