பழுதான தெருவிளக்குகள்

Update: 2026-09-13 10:13 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட(ரேஞ்ச்-2) பாலவாடி லைன்ஸ் பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் காணப்படுகிறது. ஆனால் அங்குள்ள பெரும்பாலான தெருவிளக்குகள் பழுதடைந்து கிடக்கின்றன. இதனால் இரவில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் மேலும் அதிகரிக்கிறது. இதனால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே தெருவிளக்குகளை பழுது நீக்க வேண்டும்.

மேலும் செய்திகள்