ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-09-13 09:45 GMT

பல்லடத்தில் உள்ள மங்கலம் ரோட்டில் மின்கம்பம் ஒன்று நீண்ட நாட்களாக சாய்ந்த நிலையில் உள்ளது. எந்த நேரமும் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தை மாற்றக் கோரி மின்வாரியத்திற்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக பொதுமககள் நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். மேலும், வாகன விபத்தும் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிதாக வேறு மின்கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ராமசாமி, பல்லடம்.

மேலும் செய்திகள்