முன்சிறை அருகே உள்ள சேனவிளை பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் சாலையின் நடுவே ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். வேகமாக வரும் வாகனங்கள் மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, போக்குரவத்துக்கு இடையூறாக காணப்படும் மின்கம்பத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வைகுண்டராஜன், சேனவிளை.