தெரு மின்விளக்குகளை எரியவிட வேண்டும்

Update: 2026-09-13 13:04 GMT

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒன்றியம் வடமாதிமங்கலம் கூட்ரோட்டில் இருந்து வடமாதிமங்கலம் ஊருக்குள் செல்லும் சாலையை கீழ்ப்பட்டு, திருமலை ராயன்குப்பம், மண்டகொளத்தூர், கரிகாத்தூர் ஆகிய கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இரவில் சாலையோரம் மின் விளக்குகள் எரியவில்லை. அந்த வழியாக செல்லும் மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து பலமுறை ஊராட்சி செயலாளரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தெரு மின் விளக்குகளை எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதேபோல் கீழ்ப்பட்டு ஊராட்சி கெங்கையம்மன் கோவில், முனீஸ்வரன் கோவில், காலனி பகுதி, ரோட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் தெரு மின் விளக்கு எரியவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். இதுகுறித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தாமோதரன், வடமாதிமங்கலம். 

மேலும் செய்திகள்