மேல்மலையனூர் அடுத்த கீழ்செவளம்பாடி கிராமத்தில் இரவு நேரங்களில் முன்அறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் உள்பட அனைவரும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மின்வாரியத்துறை அதிகாரிகள் சீரான மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.