சிதம்பரம் அருகே கீழப்பெரம்பை கிராமத்தில் சாலையோரத்தில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் அவ்வழியாக மாணவ-மாணவிகள், விவசாயிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின்கம்பம் அமைத்து, தொங்கும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்