அந்தியூரில் இருந்து சந்தியபாளையம் செல்லும் சாலையில் தனியார் பள்ளி அருகே டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. இதை சுற்றிலும் மரங்கள் வளர்ந்து மின்கம்பிகள் அருகே மரக்கிளையில் உரசியபடி உள்ளது. இதை தெரியாமல் மழைக்காலத்தில் செடிகளை யாராவது பிடித்தால் மின்கசிவு ஏற்பட்டு பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு டிரான்ஸ்பார்மரை சுற்றியுள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?