வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகர் மெயின் சாலையில் உள்ள மின்விளக்குகள் எரியாமல் இருப்பதால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அத்துடன் நேதாஜி நகர் 2-வது குறுக்குத் தெருவிலும் தெரு மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். வழிப்பறி, திருடர்கள் பயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெரு மின் விளக்குகளை எரியவிட வேண்டும்.
-பத்மநாபன், வேலூர்.