மின்கம்பத்திற்கு வேலி அவசியம்

Update: 2026-09-20 14:36 GMT

மேச்சேரி பஸ் நிலையத்தின் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி நடைபாதையையொட்டி சேதமடைந்த மின்கம்பம் உள்ளது. மேலும் மழை பெய்யும்போது அந்த மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் தாக்குதல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்களும், நடை பாதையில் செல்பவர்களும் அச்சத்தில் உள்ளனர். எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு ஆபத்தான மின்கம்பத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்