இடிகரையில் கிருஷ்ணாபுரம் சாலையில் மின்கம்பங்கள் உள்ளன. ஆனால் ெதருவிளக்குகள் இல்லை. இதனால் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அங்கு தோட்டப்பகுதிகள் உள்ளன. அங்கிருந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் சாலைக்கு வந்தால் கூட தெரியாது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. அத்துடன் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. எனவே அங்கு ெதருவிளக்கு வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.