பழுதடைந்த மின்மாற்றி

Update: 2026-09-20 13:57 GMT

அரியலூர் ரெயில் நிலைய சாலையில் ஏராளமான வீடுகள் உள்ளன. மேலும், இந்த வழியாக ரெயில் நிலையத்திற்கு மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என பலரும் சென்று வருகின்றனர். இந்நிலையில், ரெயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அருகே அமைந்துள்ள மின்மாற்றி மிகவும் பழுதடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் துருப்பிடித்து நீட்டிக்கொண்டு உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழைய மின்மாற்றியை அகற்றிவிட்டு புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்