மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட 46 புதூரில் உள்ள ஈரோடு வெள்ளாளபாளையம் வாய்க்கால் ரோட்டில் புதிதாக தார் சாலை போடப்பட்டுள்ளது. ஆனால் சாைலயோரம் உள்ள தெருவிளக்கு கடந்த 3 மாதங்களாக எரியவில்லை. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் செல்ல பெண்கள், சிறுவர், சிறுமிகள் அச்சப்படுகின்றனர். தெருவிளக்கு எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?