சென்னை எழும்பூர், சிவராவ் சாலை பட்டாளம் மார்க்கெட் ஆவின் பாலகம் அருகே மின்பெட்டி ஒன்று உள்ளது. இந்த மின்பெட்டி கதவுகள் திறந்து மின்வயர்கள் வெளியே வரும்படியான ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடனே உள்ளனர். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.