பள்ளி மைதானத்தில் மின்விளக்கு வசதி

Update: 2026-11-15 19:36 GMT

ராணிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் காலை, மாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடமாக உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள் பள்ளி மைதானத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். மாலையில் பள்ளி மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளி மைதானத்தில் மின் விளக்கு வசதி ஏற்படுத்துவார்களா?

-வினோத்குமார், ராணிப்பேட்டை. 

மேலும் செய்திகள்